பட்டையை கிளப்பும் பிஸ்தா படத்தின் டிரைலர்
மெட்ரோ, பிளட் மணி போன்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான சிரிஷ் சரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிஸ்தா. ரமேஷ் பாரதி இயக்கத்தில் அருந்ததி நாயர், சதீஷ், யோகி பாபு மற்றும் காமெடி நடிகர் செந்தில் நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது.
வரும் அக்டோபர் ஏழாம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கும் இந்த ட்ரெய்லரின் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.
கும்பகோணத்தில் ஓர் அதிசய திருமணம் என்று ஆரம்பிக்கும் இந்த ட்ரெய்லரில் கல்யாணப் பெண் யார் என்று தெரியாமலேயே ஒரு மாப்பிள்ளை ஊர்வலம் நடக்கிறது. அதை தொடர்ந்து திருமணத்திற்கு வைக்கும் பேனரில் தொடங்கி பல இடங்களிலும் திருமண பெண் முகம் மட்டும் மறைத்து காட்டப்படுகிறது.
இதுவே படத்தின் மீதான ஆவலை தூண்டுகிறது. மேலும் காமெடி ஜாம்பவான் நடிகர் செந்தில் இதில் நடித்திருப்பதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடன் இணைந்து சதீஷ் மற்றும் யோகி பாபுவின் காமெடி அலப்பறைகளும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. இறுதியாக கவுண்டமணியின் காமெடி டயலாக் ஆன இவர் பெரிய பிஸ்தா, முந்திரி பருப்பு என்ற வசனத்துடன் டிரைலர் முடிகிறது. இந்த டிரைலர் தற்போது அதிக பார்வையாளர்களை கடந்து வரவேற்பை பெற்றுள்ளது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva