அப்பா வேடத்தில் அற்புதமான நடிப்பை வழங்கிய எஸ்.வி. ரங்கா ராவ்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அப்பா கதாபாத்திரங்களை ஏற்க ஏராளமான நடிகர்கள் இருந்தார்கள். ஆனால், அன்பும் கண்டிப்பும் அரவணைக்க, பகடி இழையோடும் மெல்லிய நகைச்சுவையைப் படரவிட்டு, செல்வச் செருக்கை காட்டாத அப்பா கதாபாத்திரங்களுக்கு எஸ்.வி.ரங்கா ராவை விரும்பி அழைத்துகொண்டது தமிழ் சினிமா.


எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல எஸ்.வி.ஆர். என்று மூன்றெழுத்துகளால் அழைக்கப்பட்ட சாமர்லா வெங்கட ரங்கா ராவ் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நிஜாம்கள் அமைந்த புகழ்பெற்ற கோட்டை நகரான நுஸ்வித்தில் 1918-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து இந்துக் கல்லூரியில் படித்து இளங்கலையில் அறிவியல் பட்டம் பெற்ற ரங்கா ராவ், இரண்டு தெலுங்குப் படங்களையும் இயக்கியவர்.


ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், எந்த வகை உணர்ச்சியையும் எளிதில் வெளிப்படுத்திவிடும் கண்கள், மந்திரப் புன்னகை, அலட்டல் இல்லாத அளவான உடல்மொழி, தெலுங்கையும் தமிழையும் சேதம் செய்யாமல் உச்சரிக்கும் மொழித்திறன் என இயல்பிலேயே அமைந்துவிட்ட அம்சங்கள் அவரை பிறவிக் கலைஞன் எனக் கூறச் செய்தன. தாம் ஏற்ற கதாபாத்திரங்களில் ரங்கா ராவ் என்றுமே நடித்ததில்லை; கூடு பாய்ந்திருக்கிறார். கதாபாத்திரமாகவே மாறிவிடும் மாயம் தெரிந்த மகா நடிகர். 25 ஆண்டு திரை வாழ்க்கையில் (தமிழ்ப் படங்கள் 53, தெலுங்குப் படங்கள் 109) அவர் பங்குபெற்ற 163 படங்களிலும் இந்த மாயத்தைக் காணமுடியும்.


ரங்கா ராவ் திரையில் அடிவைத்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில் நாகி ரெட்டியின் தயாரிப்பில் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 1952-ல் வந்த ‘பெல்லி செஸ்ஸி சூடு’ படத்தில் தாராளம் மனம் கொண்ட கிராமத்து ஜமீன்தாராகத் தோன்றினார். ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்ற தலைப்புடன் தமிழில் வெளியான அந்தப் படத்தில் 60 வயதுத் தோற்றத்தில் சாவித்திரியின் தந்தையாக நடித்தார். ஆனால், அப்போது அவரின் உண்மையான வயது 34. அப்போது தொடங்கி அவரை அப்பா கதாபாத்திரங்களில் அதிகமும் முத்திரை குத்தின தெலுங்கு, தமிழ் சினிமாக்கள். ஆனால், ஏற்ற ஒவ்வொரு அப்பா கதாபாத்திரத்தையும் தனது தனித்த நடிப்பு பாணியால் வெவ்வேறாகத் தெரியும்படி செய்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார்.


1963-ல் வெளியான ‘நர்த்தன சாலா’ தெலுங்குப் படத்தில் பாண்டவர்களுடன் விராட நாட்டு அரண்மனையில் மறைந்துவாழும் திரௌபதியாக சாவித்திரி நடித்தார். பார்த்ததுமே இச்சை கொண்டு திரெளபதியை அடையத் துடிக்கும் கீசகனாக ரங்கா ராவ் நடித்தார். பல படங்களில் சாவித்திரிக்கு அப்பாவாக நடித்த ரங்கா ராவ், இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதா என்று படம் வெளியாகும் முன்பே பத்திரிகை ஒன்று எழுதியது. ஆனால், அதே பத்திரிகை படம் வெளியானதும் “ சாவித்திரி திரௌபதியாகவும் எஸ்.வி.ஆர் கீசகனாகவும் மாறிவிட்டார்கள். அவர்களின் திறமை அவர்கள் உருவாக்கிய கண்ணியத்தைக் காப்பாற்றியது” என்று எழுதியது. ரங்கா ராவுக்கு தெலுங்கு சினிமா கதாநாயக வாய்ப்பை வழங்க முன்வந்தபோது அதை முற்றாக மறுத்த நடிகர் அவர். அதே நேரம் என்.டி.ஆர். நாகேஷ்வர ராவை விட சில படங்களுக்கு அதிக ஊதியம் பெற்ற ஒரே குணசித்திர நடிகர்!


நர்த்தனசாலா’ படத்தில் ஏற்ற கீசகன் கதாபாத்திரத்துக்காக ஆப்பிரிக்க ஆசிய சர்வதேசப் படவிழாலில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றவர். ரங்கா ராவின் நடிப்பில் வெளிவந்த ‘அன்னை’, ‘சாரதா’, ‘நானும் ஒரு பெண்’, ‘கற்பகம்’, ‘நர்த்தன சாலா’ ஆகிய ஐந்து படங்கள் குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றிருக்கின்றன. திரை நடிப்பில் தனித்து முத்திரை பதித்த வித்தகர் எஸ்.வி.ரங்கா ராவின் அஞ்சல் தலையை 2013-ல் வெளியிட்டுக் கௌரவம் செய்தது இந்திய அரசு.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 60
  • More
சினிமா செய்திகள்
சினம் பட இயக்குநர் கூறிய வியக்க வைத்த சம்பவம்
செப்டம்பர் 16 ஆம் தேதி அருண் விஜய் நடிப்பில் அவருடைய தந்தை விஜயகுமார் தயாரிப்பில் இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்
படப்பிடிப்பை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்
எஸ்.ஜி. சார்லஸ் இயக்கி வரும் சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், த
முன்பதிவில் பல கோடி லாபம் பார்த்த பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்கள் அனைவரும் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்
கணவருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் நடிகை காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரு
விஜய் ஆண்டனி நடித்து வரும் "கொலை" படம் பற்றிய அப்டேட்
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பட
சபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்
ஜெயம் ரவி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவரை ஜெயராம் அழைத்துச் சென்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. மணிரத்னம்
போண்டாமணிக்கு உதவிய தனுஷ்
நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலி
கவர்ச்சி உடையில் கலக்கும் ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மென்ட்
சிம்புவுக்கு ஐசரி கணேஷ் குடுத்த பரிசு
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. கடந்த வாரம் வெளியான இந்த படம் பரவலாக நல்ல வரவேற்பையும், வசூலையும் பெ
சோழர் வரலாற்றை பிரித்து மேய்ந்த விக்ரம்
கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ
ஓடிடியில் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்- ஏ.ஆர். ரகுமான்
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்க
அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாரான அஜித்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த
சிறப்பு செய்திகள்
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு
கார்களின் மீது காதல் கொண்ட தனுஷ்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும்
மீண்டும் நடிக்க வருகிறார் மைக் மோகன்
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர்
Latest News
பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள்நிர்ணய கலந்துரையாடல்!
தேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றற
தேசிய கலை இலக்கியப் போட்டி_2022
ஆறு போட்டிகளில் முதலாம் இடங்கள் ஒரு போட்
ஜப்பான் பேரரசர் நருஹிதோவை சந்தித்த ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பா
கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக கு
ஜப்பானில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர்
ஜனாதிபதி ஓர் நகைச்சுவையாளர் - சஜித் பிரேமதாஸ
தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்
நித்திரை தூக்கத்தால் ரயிலை நிறுத்த மறந்த சாரதி
கொழும்பு தெமட்டகொடவில் புகையிரதம் விபத்த
’மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற கட்டிட தொழிலாளியின் மகள்
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட
வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு ஓய்வூதியம்
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இல
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களுக்கான விஷேட அறிவிப்பு
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இல
பொருட்கள் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
பொருட்கள் ஏற்றுமதி மூலமான வருமானம் கடந்த