விஜய்யின் படத்திற்கு வாரிசு என பெயர் வைத்த ராசி தயாரிப்பாளருக்கு வாரிசு வந்தாச்சு
விஜய்யை வைத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்திற்கு வாரிசு என்ற பெயரை தேர்ந்தெடுத்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. இவர் தெலுங்கு சினிமா உலகில் கொடிகட்டி பறக்கும் ஒரு தயாரிப்பாளர்.
தில் ராஜு தயாரிப்பில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த முன்னா திரைப்படத்தின் மூலம் தான் வம்சி முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானவர். இப்பொழுது தமிழில் விஜய்யை வைத்து வாரிசு என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் ஒரு பேமிலி சென்டிமென்ட் படமாக எடுக்கிறார்.
ஏகப்பட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு விஜய்க்கு சம்பளம் 120 கோடியாம். விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜு படத்திற்கு வாரிசு என்று பெயர் வச்ச ராசியால் அவருக்கு வாரிசு வந்திருக்கிறது.
முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜுவின் முதல் மனைவி ஹன்ஷிதாவுக்கு ஏற்கனவே 5 வயது மகனும், இரண்டு வயது மகளும் இருக்கின்றனர். 51 வயதான தில் ராஜுவின் இரண்டாவது மனைவி வைகா ரெட்டிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
மருத்துவமனையில் தில் ராஜு தனது ஆண் குழந்தையை கையில் ஏந்தி அந்த குழந்தையுடன் பேசியபடி மனைவியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் தளபதியின் வாரிசு படத்தின் மகிமைதான் என கிண்டல் அடிக்கின்றனர்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva