
நடிகை மீனாவின் கணவர் திடீர் உயிரிழப்பு
நடிகை மீனாவின் கணவர் திடீரென நேற்று இரவு உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீனா கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய் நடித்த தெறி உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை மீனாவின் கணவர் காலமானதை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























