விஜய்யின் மகனை பார்த்து தளபதின்னு நினைத்த ரசிகர்கள்
மாஸ்டர் படத்தை அடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் நடத்த இருந்தார்கள்.
ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள். எப்போதும், தான் நடித்துக் கொண்டிருக்கும் படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றி யோசிப்பார் விஜய். தற்போது தளபதி 65 பட வேலையே இன்னும் முடியாத நிலையில் அடுத்ததாக தளபதி 66 படத்தை தயாரிக்கப் போவது தில் ராஜு. அதை இயக்கப்போவது தோழா, மகரிஷி படங்களை இயக்கிய வம்சி என்னும் இயக்குனர் என்று தகவல்கள் பரவியுள்ளது. விஜய்யின் மகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கப் போகிறார் எனும் தகவல் வரும் நிலையில் சஞ்சயின் வீடியோ ஒன்று திடீரென ட்விட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சஞ்சய் காரில் சென்று கொண்டிருப்பது போலவும் அவர் இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “டக்குனு பார்க்க தளபதின்னு நினைச்சுட்டோம் ப்ரோ..” என்று புகழ்கிறார்கள்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva