Ads
0 0 0 0 0 0
 • 556
 • 294
Comments (0)
Author
 ·   · 1 albums
 •  · 2 friends
 •  · 3 followers
Info
Created:
Updated:
Recent Images
 • 99
 • 93
 • 109
 • 105
 • 103
 • 166
 • 174
 • 175
 • 171
 • 180
 • 169
 • 176
 • 182
 • 190
 • 181
 • 168
 • 184
 • 172
 • 178
 • 166
 • 189
 • 178
 • 187
 • 189
"நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை..நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.நீ நீயாக இரு".!*அப்துல் கலாம்*அருளியது.
 • 31
Added a news 
இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் பொதுச் சபை கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 04 ஆம் திகதி கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சிரேஷ்ட கால்நடை மருத்துவர்களான எச்.பீ. பிரேமசிறி மற்றும் ஆர்.எம்.பீ.எச். தசநாயக்க ஆகியோருக்கு இதன்போது கௌரவ பிரதமரினால் சிறப்பு பாராட்டு விருது மற்றும் நினைவு பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது மாநாட்டின் தலைவர் கால்நடை வைத்தியர் எரந்திகா குணவர்தன அவர்களினால் வருடாந்த மாநாட்டிற்கு வருகை தந்த பிரதமர் உள்ளிட்ட விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.இதன்போது இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தின் போது இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் புதிய தலைவராக கால்நடை வைத்தியர் சுசந்த மல்லவஆராச்சி தெரிவு செய்யப்பட்டார்.
 • 41
Added a news 
சனிக்கிழமை இரவு ´கெசெல்வத்த பவாஸ்´ என்பவரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 • 42
Added a news 
இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளும் இடம்பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது.இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. மேலும் இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாநாடு நிறைவடைந்ததும் விளாடிமிர் புதின் நாடு திரும்புகிறார்.இந்த மாநாட்டுக்கு முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவும் சந்திக்கிறார்கள். இதைப்போல இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய ராணுவ மந்திரி செர்ஜெய் ஷோய்குவும் சந்தித்து பேசுகின்றனர்.பின்னர் இந்த 4 மந்திரிகளும் பங்கேற்கும் 2+2 பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது. இந்த சந்திப்புகளில் பரஸ்பர, பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இருநாட்டு மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
 • 43
உங்கள் சிந்தனைக்கு.....
 • 42
Good Morning...
 • 43
Added a news 
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது  வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  மேலும் 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05-12-2021 ) பிற்பகல் 3-30 மணியளவில் மர்மப் பொருள் ஒன்றை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது குறித்த பொருள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளதுடன் சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தின் போது( சிவலிங்கம் யுவராஜ் வயது- 25) உயிரிழந்துள்ளதுடன் சிவலிங்கம் நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டை சூழவுள்ள வீட்டின் சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள மை இங்கு குறிப்பிடத்தக்கது-
 • 67
Added a news 
சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் குறித்த பகுதியில் நடமாடுகின்றார் என்று முல்லைத்தீவு மாவட்ட போலீஸ் அத்தியட்சகர் கலும் C திலகரட்ன, மற்றும் உதவி போலீஸ் அத்தியட்சகர் வசந்த விதாரண, மற்றும் மல்லாவி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்மால் அம்பாலிகம , குற்றப்பிரிவு போலீஸ் உத்தியோகத்தர் யூட் அந்தோணி ஆகியோருக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலை அடுத்து மல்லாவி போலீஸ் உத்தியோகத்தர்களான சபேசன் , நிர்மலன் , பகீரதன் , புஸ்பகுமார ஆகியோர் இணைந்த கைது நடவடிக்கையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பளை பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபருக்கு யாழ் மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று நீதிமன்ற பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 • 82
Added a news 
மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடை தொகுதிகளுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,இவ் வருடம் நத்தார் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் முன்னெடுக்க மன்னார் நகர சபையால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நகர சபை வருமானத்தை ஈட்டும் நடவடிக்கையாக இதனை முன்னெடுக்கவில்லை. மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கோடு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மன்னார் நகர சபையினால் மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.எனினும் குறித்த காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. நாங்கள் மக்களுக்கு பல வழிகளிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும்,மக்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை.பஜார் பகுதி உள்ளடங்கலாக மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு வர்த்தக நிலையங்களிலும் அதி கூடிய மக்களே கூடி நின்றமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சந்தர்ப்பம் இருந்தது.குறித்த விடயங்களை அவதானித்த நிலையில் இவ்வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கடைத் தொகுதிகளை வழங்குவதன் ஊடாக மக்களின் நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்த்துள்ளோம்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதற்காக மன்னார் நகர சபை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (3) காலை மன்னார் நகர சபையில் சுகாதார துறையினர்,பொலிஸார் மற்றும் மன்னார் நகர சபையின் தலைவர்,உப தலைவர், செயலாளர்,உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.குறித்த கலந்துரையாடலில் இறுக்கமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.வியாபார நடவடிக்கைகளுக்கு வருகின்ற வெளிமாவட்ட வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் இரண்டும் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தடுப்பூசி அட்டை வைத்திருத்தல் வேண்டும்.குறித்த வியாபாரிகளுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறித்த தீர்மானங்களையும்,சுகாதார நடைமுறைகளையும் கடை பிடிக்காத வர்த்தகர்களுக்கு எதிராக உடனடியாக பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்களின் அதிகமாக நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்
 • 81
Added a news 
கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்து கலந்துரையாடடியிருந்தார். குறித்த கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவகலத்தில் இடம்பெற்றது.இதன்போது சமகால அரசில் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 • 85
Added a news 
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராது அனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும் செயற்படுகின்றோம் எனவும், சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சநித்திப்பின்போது வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இந்த பிரதேசம் யுத்த காலத்திலும், அதற்கு பின்னரான காலத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்த பிரதேசமாக இருக்கின்றது. 10 ஆண்டுகளிற்கு பினரும் இவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ன நிலைப்பாடு இருக்கின்றது. உள்ளக வீதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்த வரும் இவர்கள் விசேடமாக விவசாயிகள் உரம் தொடர்பகின்றனர்.அதேவேளை கொவிட்ட நிலை காரணமாக மிகவும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான பிரதேசங்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டி உள்ளது.இனம், மதம், சமயம் என்ன விரச்சினைகளிற்கு அப்பால், அனைத்து இல்ஙகை மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக சொல்லப்Nபுhனால் காஸ், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு நாட்டு மக்கள் முகம் கொடுக்கின்றனர்.இந்த நேரத்தில் அனை;தது மக்களும் ஒன்றாக வேண்டும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும்.பாராளுமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களும் இதனை புரிந்துகொள்ள வே;ணடும்தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இதுவரை தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறவில்லை. ஆயினும், பாராளுமன்றில் சாதாரணமாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலலும், ஒட்டுமொத்தமாக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் ஒன்றாக செயற்படுகின்றோம்.பிரதேசவாதங்களை களைந்து அனைத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் ஒன்றாக செயற்படுகின்Nறூம் என அவர் இதன்Nபுhது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது தெரிவித்திருந்தார்்.
 • 86
Added a news 
யாழ்.உரும்பிராய் - மானிப்பாய் வீதியில் சைக்கிளில் சென்ற நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் முந்தைய நாள் இரவு மோதியதில் சம்பவ இடத்தில் குறித்த நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் 42 வயது மதிக்கதக்க நபர் குறித்த இடத்திலேயே பலியானார். இதனையடுத்து வாகனத்தை துரத்தி சென்ற இளைஞர்கள் சாரதியை பிடித்து நையப்புடைத்த நிலையில் பெருமளவு பொதுமக்கள் கூடி பதற்றமான நிலையேற்பட்டது.இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.பின்னர் வாகன சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
 • 88
Added a news 
இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.தேசிய மீனவ ஒத்துழைப்பு இயங்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையும் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்றையதினம் யாழ்ப்பாண நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிம் கையளிக்கப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்து.ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் இன்றையதினம் யாழ் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 • 85
Added a news 
எதிர்த்தரப்பினர் பாதீட்டை தோற்கடிப்பதற்கு எடுத்திருந்த முயற்சியை சுயநலமற்ற வகையில் மக்கள் பணிக்கானதாக பயன்படுத்த முன்வந்திருந்தால் அது எமது பிரதேசத்தின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வேலணையை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பது அவசியம் என்வும் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்டபில் அவர் மேலும் கூறுகையில் –எமது வேலணை பிரதேசமானது யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் மிக வருமானம் குறைந்த சபைகளுள் ஒன்று.வாழும் மக்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இதனால் வரி உள்ளிட்ட வருவாய் ஈட்டல்களும் குறைவாக உள்ளது. ஆனாலும் அதிலிருந்து மீண்டு அவை படிப்படியாக கட்டமைக்க்கப்பட்டு வருகின்றது. இதனால் எமது சபையில் உறுப்பினர்களின் முன்மொழிவுக்காக ஒதுக்கப்படும் நிதியும் சில இலட்சம் ரூபாக்களாகவே இருக்கின்றது.இதைக்கொண்டு எமது பிரதேசத்தின தேவைகளை முழுமையாக முன்னெடுக்க முடியாது. இது எமது அனைத்த உறுப்பினர்களுக்கும் தெரிந்ததொன்றே.அதனடிப்படையில் அனைத்து உறுப்பினர்களும் பேதங்களின்றி எமது பிரதேசத்தின் தேவைகளை இனங்காண்பதும் அபிவிருத்திக்காக எவ்வாறு நிதியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆரோக்கியமான விடயங்களை ஆராய்வதே சிறந்தது.இதேநேரம் அவ்வாறு கடந்த காலங்களில் பல முன்மொழிவுகள் பல உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் அவை சாத்திப்படாமல் போனமை அல்லது நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதங்கள் தொடர்பிலும் நாம் அக்கறை கொள்ள கொள்வேண்டும்.அவ்வாறு நடைபெறாமற் போனமைக்கு வருத்தங்களை தெரிவிப்பதுடன் அவற்றையே தொடர்ந்தும் சுட்டிக்காட்டி விவாதித்தக்கொண்டிராமல் அவற்றை நடைமுறையாக்குவதற்கான வழியை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்காற்றுவதும் அவசியம்.அதுமட்டுமல்லாது எமது பிரதேச சபையின் ஆட்சிக்காலத்தை எமது கட்சி பொறுப்பேற்ற 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது கட்சி எதிர் கட்சியாகவே இருந்தது. அதனால் எமது சபைக்கான வருமானங்கள் ஒதுக்கீடுகளை மத்திய அரசால் அதிகளவாக கிடைக்கப் பெறுவதில் பல தடைகள் காணப்பட்டன.இதேநேரம் இக்காலப் பகுதியில் சில திட்டடங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை பூரணமாகாத நிலையிலேயே உள்ளது. இதையும் பூணப்படுத்த வேண்டிய நிலைக்குள்ளும் எமது இந்த சபை தள்ளப்பட்டுள்ளது.அதேபோன்று தற்போது நாம் ஆளும் கட்சியாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார நிலைமை கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசிடமிருந்து பெற்று திட்டங்களை முன்னெடுப்பதில் கால தாமதங்கள் காணப்படுகின்றது.ஆனாலும் எமது தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் விசேட முன்மொழிவுகளூடாகவும் அவரது அமைச்சின் உடாகவும் வாழ்வாதாரம் கட்டுமாணம் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.அதேபோன்று பிரதேச சபையும் அதன் ஊழியர்களும் சுகாதாரம் உள்ளிட்ட தன்னாலான அனைத்து விடயங்களையும் முடியுமானளவு முன்னெடுத்தே வருகின்றது.இவ்வாறான நிலையில் எமது சபையை அரசியலுக்காக அவமானப்படுத்துவதானது ஒவ்வொரு உறுப்பினர்களும் தம்மைத் தாங்களே பலவீனப்படுத்தவதாக அமைகின்றது.அதுமட்டுமன்றி சபையின் ஆட்சியில் யார் அமர்ந்திருப்பது என்பது முக்கியமானதல்ல. அந்த ஆட்சிக்கு உறுப்பினர்களாகிய நாம் வழங்கும் வகிபாகம் என்பதுதான் முக்கியமானது.பிரதேச சபை என்பது அபிவிருத்தியை மையாமாக கொண்ட ஒன்றானகவே இருந்து வருகின்றது. அதற்கான நிதி மூலதனங்களை பெறுவதற்கும் அதைச் செய்வதற்கும் வழிமுறைகள் இருந்தும் தவறவிட்டுள்ளோம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.இதேநேரம் எமது பிரதேச சபையின் அதிகார எல்லைக்கு அப்பாற் சென்று பல்வேறு விடயங்களை கதைப்பதாலோ அன்றி ஊடகங்களின் செய்திக்காகவோ கதைப்பது ஆரோக்கியமானதல்ல. இது எவ்விதத்திலும் மக்கள் நலனாகாது.அதேபோன்று பிரச்சினைகளை இனங்கண்டு சபைக்கு தெரியப்படுத்தி தீர்வுகாண்பதே சபை உறுப்பினர்களின் பங்களிப்பாக இருக்கின்றது. ஆனால் இருக்கும் பிரச்சினைகளைவிடுத்து சுயநல அரசியலுக்காக முதலீடுகளை ஏற்க மறுப்பதும் அவற்றை தடுப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வேறுபல பிரச்சினைகள உருவாக்கி அதை ஊடகங்களுக்கு காண்பிப்பதும் ஆரோக்கியமானதொன்றல்ல.அதேபோன்று எந்த அபிவிருத்தியிலும் ஒரு சிறு பாதகத் தன்மை இருக்கத்தான் செய்யும். அதற்காக அதை நிராகரிப்பதும் சிறந்ததொன்றல்ல.எதிரணியினர் என்பது சபையில் எதிரியாக இருப்பது அல்ல. அவர்கள் சுயநலமற்ற ஆரோக்கியமான விடயங்களை, கருத்துக்களை ஆளும் தரப்பினருக்கு தெரிவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் அநேகமானவை கூட்டமைப்பினரின் ஆளுகைக்குள்ளேயே இருக்கின்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் ஆட்சியமைப்பதற்கான முழுமையான பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை.ஆனாலும் மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் ஒவ்வோர் பிரதேசத்திலும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக எமது கட்சி அந்த பிரதேச சபைகளை பொறுப்பேற்று ஆட்சி அமைக்க முன்தவந்தவர்களுக்கு பங்காளிகளல்லாது ஆட்சி அமைக்க ஆதரவை வழங்கியிருந்தது.இந்த சபையை நாம் பொறுப்பெற்றிருந்த நிலையில் எமக்கு ஆதரவுக்கரத்தை ஶ்ரீலங்கா பெரமுனவும், ஶ்ரீலங்கா சதந்திரக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆதரவுக் கரத்தை வழங்கியிருந்தன. அது தற்போதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்தவகையில் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவோ அன்றி பாதீட்டை தோற்கடிப்பதற்காகவோ பிரயத்தனத்தை முன்னெடுப்பதை விடுத்து அவ்வாறான முயற்சிகளை சுயநலமன்றி மக்கள் நலன் சார் தேவைகளுக்கு பயன்படுத்தினால் எமது பிரதேசமும் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது அபிவிருத்தியாலும் உச்ச நிலையை எட்டமுடியும். அந்தவகையில் இந்தப் பதிவு யாரையும் குற்றம் சாட்டுவதற்காவோ விமர்சிப்பதற்காகவோ பதிவிடவில்லை. ஆரோக்கியமான செயற்பாடடை முன்னெடுப்பதற்கான ஒன்றாகவே அமைகின்றது. அதற்காக நாம் அனைவரும் பாடுபடுவோம் அதுவே சிறந்தது.
 • 87
Added a news 
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பாண் ஒரு ராத்தலின் விலை 60 ரூபாய்யாகவும், பணிஸ் ஒன்று 20 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.இவ்வாறான நிலையில் வடபகுதியில் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் பல தடவைகள் கோதுமை மாவின் விலை அதிகரித்தது.இதனால் தற்போது மாவின் விலை சடுதியாக அதிகரித்ததன் காரணமாக தற்பொழுது பாணின் விலை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.அந்த வகையில் தற்போது பாண் 75 ரூபாய்க்கும், பணிஸ் 25 ரூபாய் தொடக்கம் 35 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக நுகர்வோர் மிகவும் பாதிக்கப்பட்டு காரணமாக தாம் உற்பத்தி செய்யும் பேக்கரி உற்பத்திவகைகளை வர்த்தக நிலையங்களுக்கு விற்பனைக்காக கொடுத்து மீண்டும் மறுநாள் அதை திரும்பி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக தமது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளதாகவும் சில பேக்கரிகள் தற்பொழுது மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.இதனை கருத்தில் கொண்டு பேக்கரி உற்பத்திக்கு சலுகை விலையில் கோதுமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
 • 89
Added article 
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.சற்று முன்னர் யூடியூப் இணையதளத்தில் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதும் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அனைவரையும் கவர்ந்து விட்டது.அம்மா சென்டிமென்ட் பாடல் இதுவரை தமிழ் திரையுலகில் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை என்ற அளவில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும்.வீடியோ இதோ.....https://youtu.be/auBq_Z6zWSE
 • 88
Added article 
எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார்.கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
 • 89
Added article 
‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘திருட்டுப் பயலே', ‘கோவில்’, ‘மதுர’, ‘புதுப்பேட்டை' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘கிராண்ட்மா' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.விழாவில் நடிகை சோனியா அகர்வால் கலந்து கொண்டு பேசியதாவது:-இந்த படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். பல படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்து உள்ளேன். இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண். நேரில் பார்த்தால் அப்படி தெரியாது.ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு காரில் தனியாகவே பயணம் செய்திருக்கிறேன். காரை நானே ஓட்டுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது என்னைக் கேலி செய்த ஒரு மாணவனை கன்னத்தில் அறைந்து நான் துணிச்சலான பெண் என்பதை நிரூபித்தேன்.எனது தாய்மொழி பஞ்சாபி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து ‘கிராண்ட்மா' படம் திரைக்கு வர உள்ளது.எனக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் இருக்கிறார். அவர் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். எனக்கு இசையில் ஆர்வம் உண்டு என்றாலும், சொந்த குரலில் பாடி நடிக்கவில்லை. அடுத்து ஒரு படத்தில் பாடகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றும் சோனியா அகர்வால் பேசினார்.
 • 89
Added a news 
உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதில், கர்நாடகாவில் 2, மகாராஷ்டிராவில் 8, குஜராத் மற்றும் டெல்லியில் தலா 1 என 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜெய்ப்பூர் திரும்பியபிறகு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, நாகவுர் மாவட்டம் ரோஷிசா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 • 93
Added a post 
பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் ஃபில்டர்கள், ‘டம்ளர் - டவரா செட்’கள் இவைதான் கும்பகோணம் டிகிரி காபிக்கான அக்மார்க் முத்திரை எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தால் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் ஆலயத்தின் மொட்டை கோபுர வாசலில் ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ இருந்தது. இங்கே ஃபில்டர் காபி குடிக்க எந்நேரமும் கூட்டம் வரிசை கட்டி நிற்கும். தனது கடையை நம்பி வந்தவர்களின் நாவுக்கு ருசியான காபியைத் தருவதில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்தவர் கடையின் உரிமையாளர் பஞ்சாமி ஐயர்.இதனால் அக்கம் பக்கத்து மிராசுகள் எல்லாம் வண்டி கட்டி வந்து கிளப் டிகிரி காபிக்காகத் தவம் கிடந்தார்கள். பசும்பாலை அப்படியே கறந்து துளியும் தண்ணீர் கலக்காமல் அப்போதே காய்ச்சி எடுத்து, ஸ்பெஷலாக வறுத்து அரைக்கப்பட்ட காபி தூளில் நம்பர் ஒன் தரத்தை எடுத்து அதில் ஒரே ஒரு முறை மட்டுமே டிகாஷன் எடுத்து மணக்க மணக்க ஃபில்டர் காபி போட்டுக் கொடுத்தார் பஞ்சாமி ஐயர். இதற்காகத் தனது ‘கிளப்’பின் பின்புறம் பிரத்யேக மாட்டுப் பண்ணையே வைத்திருந்தார். அந்தக் காலத்திலேயே அதில் இருபதுக்கும் குறையாத பசு மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன என்றால் பஞ்சாமி ஐயரின் பொருளாதாரப் பலத்தை ஊகித்துக் கொள்ளுங்கள்.கும்பகோணம் மற்றும் அதன் அக்கம் பக்கத்தில் மட்டுமே தெரிந்திருந்த பஞ்சாமி ஐயர் காபியை உலகறியச் செய்தது இசை வித்வான்கள்தான். கும்பகோணம் இசைக் கச்சேரிகளுக்கு வந்த வித்வான்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியைக் குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே மாறிப்போனார்கள். இதனால் போகுமிடமெல்லாம் ‘குடிச்சா கும்பகோணம் பஞ்சாமி ஐயர் கடை டிகிரி காபி மாதிரி குடிக்கணும்’ என்று பேச ஆரம்பித்தார்கள். இதுவே பேச்சு வழக்கில் கும்பகோணம் டிகிரி காபியாகிப் போனது.கும்பகோணம் கொழுந்து வெற்றிலைக்குப் போட்டி போட்டுக் கொண்டு கும்பகோணம் டிகிரி காபியும் பிரபலமானது. பஞ்சாமி ஐயரைத் தொடர்ந்து இன்னும் பலர் கும்பகோணம் பகுதியில் டிகிரி காபி கடைகளைத் திறந்தார்கள். என்றாலும் 1960 தொடங்கி 1986 வரை கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர்தான் கொடிகட்டிப் பறந்தார்.இப்போதும் கும்பகோணத்தில் டிகிரி காபி கடைகள் பல இருக்கின்றன. ஆனால், அவர்கள் யாரும் ‘கும்பகோணம் டிகிரி காபி கடை’ என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை. இது குறித்து நம்மிடம் பேசினார் கும்பகோணத்தில் டிகிரி காபி கடை வைத்திருக்கும் ‘முரளீஸ் கபே’ உரிமையாளர் முரளி“பித்தளையில் டம்ளர் - டவரா ‘செட்’டையும் ஃபில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்ன்னு மூணு தரம் இருக்குஇதுல ‘பி’ தான் நம்பர் ஒன் தரம். பஞ்சாமி ஐயர் இந்தத் தூளில்தான் காபி போட்டார். மத்தவங்க ஒரு தடவ காபித் தூள் போட்டா அதுலருந்து மூணு தடவை டிகாஷன் அடிப்பாங்க. ஆனா, பஞ்சாமி ஐயர் ஒரே ஒரு தடவதான் டிகாஷன் எடுப்பாரு. இப்படியெல்லாம் செஞ்சுதான் தன்னோட காபிக்கு ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைச்சிருந்தாரு.அதுபோல, டிகிரி காபிக்கும் பித்தளை ‘டம்ளர் - டவரா செட்’ட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கும்பகோணம் பித்தளைப் பாத்திரங்களுக்குப் பேர் போன ஊர். அதனால் அந்தக் காலத்தில் பித்தளை டம்ளர் - டவரா ‘செட்’ல டிகிரி காபியைக் கொடுத்தாங்க. அப்ப எவர்சில்வரும் அவ்வளவா புழக்கத்தில் இல்லை. அதுவுமில்லாம மத்த பாத்திரங்களைவிடக் கூடுதல் நேரத்துக்குப் பித்தளை பாத்திரத்துல சூடு நிலைத்து இருக்கும். கும்பகோணம் டிகிரி காபியைப் பித்தளை பாத்திரங்கள்ல குடுத்ததுக்கு இதுதான் காரணம்” என்று கும்பகோணம் டிகிரி காபி ரகசியத்தைச் சொல்லி முடித்தார் முரளி
 • 91
Added a news 
தமிழ்நாட்டில் இன்று 1,02,068 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 30 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 743 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 85 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று அரசு மருத்துவமனைகளில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் என 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. 
 • 94
 • 96
Added a news 
இந்தோனேஷியா – ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செமெரு எரிமலை சனிக்கிழமையன்று வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.எரிமலையில் இருந்து பெருமளவு புகை வௌியேறுவதுடன், அருகிலுள்ள கிராமங்களில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.புகை 15 ஆயிரம் மீட்டருக்கு மேல் நோக்கி பரவக்கூடும் என்பதால், விமான சேவைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.செமெரு மலையை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள், சாம்பலும் புகையும் சூழ்ந்துள்ள பகுதியிலிருந்து வௌியேறி வரும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.எரிமலை வெடிப்பினால் குறைந்தது 57 பேர் காயமடைந்துள்ளதாகவும், பலர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.கடல் மட்டத்தில் இருந்து 3,676 மீட்டர் உயரத்திலுள்ள செமெரு எரிமலை கடந்த ஜனவரி மாதத்திலும் வெடித்துச் சிதறியது.
 • 98
படித்ததில் பிடித்தது.....
 • 96
Added a news 
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடுகளாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.திஸ்ஸ அத்தநாயக்கவின் ஆன்மிக பயணத்தின் ஒரு அங்கமாக இன்று (5) நுவரெலியா – வலப்பனை நாராங்தலாவ, மைலகஸ்தென்ன ஸ்ரீ தர்மராஜராமய விகாரையின் விகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதேன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.தமது கருத்துகளை, நிலைப்பாடுகளை சுதந்திரமாக பாராளுமன்றத்துக்குள் வெளியிடும் உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும். அந்த உரிமையை பயன்படுத்தி கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்க முற்படுவது, அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பன ஏற்புடைய விடயமாக அமையாது. அவற்றை கண்டிக்க வேண்டும். அதேபோல நாடாளுமன்றத்துக்குள் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்களானவை ஜனநாயக ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தலை ஏற்கமுடியாது. எனவேதான், பாாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை சபை அமர்வுகளை புறக்கணிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். அதற்கான நடவடிக்கை எவ்வாறு இடம்பெறும் என்பதை கட்சியின் பாராளுமன்றக்குழு தீர்மானிக்கும்.குறிப்பாக பாராளுமன்றம் தொடர்பில் மக்களுக்கு தற்போது நன்மதிப்பு இல்லை. எனவே, பாராளுமன்றத்துக்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுத்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கும், கட்சித் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாராளுமன்றமும் வன்முறைக்களமாக மாறும் அபாயம் உள்ளது.நிவாரணங்கள் கிடைக்கும், சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த அரசுக்கு மக்கள் வாக்களித்தனர். அந்த எதிர்ப்பார்ப்பு ஒரு வருடத்துக்குள்ளேயே தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் சூழலும் இல்லை." - என்றும் தெரிவித்தார். 
 • 98
Added a news 
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (சனிக்கிழமை) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது.
 • 100
Added a news 
பாகிஸ்தான் – சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட இலங்கையினைச் சேர்ந்த பிரியந்த குமாரவின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நாளை(திங்கட்கிழமை) குறித்த சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. சடலத்தை நாட்டிற்கு கொண்டுவருவது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான செலவை ஏற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 • 101
Added a news 
இந்த அரசை விரட்டியடித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய - அதேபோல மக்களுக்கு சேவைகளை செய்யக்கூடிய அரசொன்றை உருவாக்குவதற்கு அனைத்து இன மக்களும் தயாராகிவிட்டனர் என்று ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.மக்கள் விடுதலை முன்ணணியின் “ஊரிலிருந்து தொடங்குவோம்” என்ற தொனிப்பொருளிலான மக்களுடானான உரையாடலும், துண்டுபிரசுர விநியோகமும் அட்டன் நகரில் இடம்பெற்றது.இன்று (05) காலை 10.00 மணியளவில் அட்டன் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் மஞ்சுள சுரவீர, உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதன்போது வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.இந்த செயற்றிட்டமானது மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமங்களிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இதில் கலந்து கொண்ட பின்னர் எரிவாயு அடுப்புகள் வெடிப்பு உட்பட சமகால நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
 • 100