Ads
மீசாலை ஒன்றுகூடல் 2023
மீசாலை ஒன்றுகூடல் 2023 Photogallery
Empty
Added article
புனே ரயில் பயணம்.ஆம் படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அவர்களின் வழிச்செலவுக்கு பணம் தரவேண்டிய தயாரிப்பு நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை. ரயில் புறப்பட்டது. எல்லோரும் பதைபதைக்க கிருஷ்ணன் மட்டும் சாவகாசமாக இருந்தார். முதல்நாள் பயணத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சக நடிகர்களுக்கு தன் சொந்த செலவில் எந்த குறையுமின்றி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் பயணத்திற்கு போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து நின்றார் உதவி கேட்டு.வெறுப்பாக தம்மிடம் இருந்த பணத்தை தந்தாலும் பின்னர் மதுரம் யோசனையில் ஆழ்ந்தார். 'தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை. அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட' கலைவாணரின் குணம் ஆச்சர்யத்தை தந்தது அவருக்கு. படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை போட்டு குடைந்துகொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை கிடைத்தது.புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த அறைக்கதவை தட்டினார் கிருஷ்ணன். எரிச்சலான மதுரத்திடம் மெதுவான குரலில் சொன்னார் கிருஷ்ணன், ”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க... ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்க தவறிட்டாங்க. எப்படியும் கிடைக்கப்போகுது. அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்க கூடாது...வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையை துவக்கப் போகிறவங்க... சின்னகோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது. அவங்க யார்ட்டயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது...அதனால நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு கிடைச்சிடப்போகுது...இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார். நெகிழ்ந்துபோனார் மதுரம்.'இப்படி ஒரு குணமுள்ள ஆளா' என அடுத்த நொடி தன்னிடம் இருந்த நகைகளையெல்லாம் கழற்றி கொடுத்தார் கிருஷ்ணனிடம். என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் நகைகளை கழற்றிக்கொடுத்த மதுரத்தின் மீது ஒரு அன்பு பிறந்திருந்தது. இரண்டொருநாளில் கிருஷ்ணனின் துாதராக மதுரம் இருந்த அறையின் கதவை தட்டினார் ஒரு நடிகர். 'கிருஷ்ணன் உங்களை மணக்க விரும்புகிறார்' என்றார். தீவிர சிந்தனைக்குப்பின் தலையாட்டினார் மதுரம். படம் முடிந்த தருவாயில் இயக்குனர் ராஜா சாண்டோவின் தலைமையில் புனேவிலேயே மதுரம் கழுத்தில் தாலி கட்டினார் கிருஷ்ணன்.
- 43
Added a post
"கஜகர்ணம் "அடித்து பார்த்துவிட்டேன். ஒன்றும் முடியவில்லை "ஒரு செயலை செய்ய முயற்சித்து முடியாமல் போகும் போது ,கடைசியில் பலரும் சொல்லும் வார்த்தை இது. அது என்ன கஜகர்ணம் ?.அழகாக விளக்கம் தருகிறார் கிருபானந்த வாரியார்.மனிதர்கள் முன்று வகை உண்டு1.கஜ கர்ணம்🐘2.அஜ கர்ணம்🐏3.கோ கர்ணம்🐂1. கஜகர்ணம் : -யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்...அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .2. அஜகர்ணம் : -ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும்.அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.... அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .3.கோகர்ணம் :-பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் !அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .- திருமுருக கிருபானந்த வாரியார்.
- 48
Added a post
சர்வதேச மருத்துவ மூலிகை, அதிமதுரம். இதன் மருத்துவ குணங்கள், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.அனேக நோய்களை நீக்குகிறது. மனிதர்களுக்கு தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி நிரம்பியது.* அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது* ஊட்டச் சத்தாகவும், ரத்தப் போக்கை கட்டுப் படுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்தி செய்யவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது* அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து, வறுத்து, சூரணம் செய்து வைத்து, 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டால், அதிகச் சூட்டால் ஏற்படும் இருமல் தீரும்* அதிமதுரம், சீரகம் சரிசமமாக எடுத்து பொடித்து, 20 கிராம் பொடியை, 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். 100 மில்லியாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால், கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தி ஆகும்* அதிமதுரம் மற்றும் தேவதாரம், தலா, 35 கிராம் எடுத்து, வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன், இரண்டு முறை கொடுத்தால், சுகப்பிரசவம் ஏற்படும்* அதிமதுரச் சூரணம் - 2 கிராம் எடுத்து, தேனில் குழைத்து, தினம், மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாகும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்* பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்* அதிமதுரம், ரோஜா மொட்டு, சோம்பு இவற்றை சம அளவில் எடுத்து, இடித்து சலித்து, இரவு படுக்கும் போது, பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது* அதிமதுரச் சூரணம், கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம், தலா, 0.5 கிராம் எடுத்து, பாலில் கந்து, நான்கு வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் ரத்தம் வருதல் நிற்கும். உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்* போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள், அதிமதுரச் சூரணம் - 1 கிராம் எடுத்து, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்கு கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்* அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக தலா, 10 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளவும். 250 கிராம் சர்க்கரையை தண்ணீர் சிறிதளவு விட்டு, பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.தேன் பதம் வரும் போது, மேற்கண்ட சூரணங்களைக் கொட்டி, லேகியம் தயாரித்துக் கொள்ளவும். தினம், மூன்று முறை, இரண்டு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால், வறட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப்புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்* அதிமதுரத்தை நன்றாக அரைத்து, பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். முடி உதிர்தல் இருக்காது* அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால், உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால், தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கிவிடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்துவிடும்* பொதுப் பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- 64
Added a post
கடவுள் இந்த உலகத்தைப் படைத்துவிட்டு, இங்கேயே தங்கிவிட்டார்.அப்பொழுது தான் அவர் செய்த தவறு அவருக்கே புரிந்தது . தினம் எதாவது புகார் கொடுக்க மனிதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.இரவு, பகல் என்ற வித்தியாசம் இல்லை. சில பேர்கள் வந்து , என் பயிர் காய்கிறது . இன்று எனக்கு மழை தேவை. அடுத்து சிலர் வந்து இன்று மழை கூடாது. அது என் வேலையை பாதித்து விடும் .நான் களிமண் பானை செய்து சுடுகிறேன்.இப்படி நிறைய புகார்கள் முரண்பாடாக வந்து கொண்டே இருந்தது.கடவுள் கிட்டத்தட்ட பைத்திய நிலைக்கே சென்றுவிட்டார். அவருக்குச் சரியான தூக்கமும் இல்லை. எல்லாருடைய ஆசைகளையும், தேவைகளையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருந்தது .பிறகு ஒரு நாள், தன் மந்திரி சபையைக் கூட்டி, என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்.அதில் ஒரு சிலர், இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை . நீங்கள் இமயமலைக்குச் சென்றுவிடுங்கள். அங்கு வந்து யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள் என்றார்கள்.கடவுள் சிறிது யோசனை செய்து அது சரி வராது. எட்மண்ட் ஹில்லாரியும், டென்சிங்கும் அங்கு வர இருக்கிறார்கள். பிறகு ஒவ்வொருவராக அங்கேயும் வர ஆரம்பித்து விடுவார்கள்.வேறு யோசனை சொல்லவும் என்றார். அடுத்து ஒரு சிலர், சந்திரனுக்குச் செல்லலாமே? என்றார்கள். கடவுள் அதற்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆளைத் தயார் பண்ணிக் கொண்டிருகிறது என்றார்.சரி எதாவது தொலைதூர நட்சத்திரத்திற்குச் செல்லலாம் என்றார்கள் மற்றும் சிலர்.கடவுள் இதெல்லாம் நிரந்தர தீர்வு ஆகாது எனக்கு நிரந்தரமாக இந்த மனிதத் தொல்லையில் இருந்து விடுபட வேண்டும் என்றார்.பிறகு , கடவுளுடைய பழைய வேலையாள் வந்து, மெல்ல அவர் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார் . உடனே கடவுள் முகம் மலர்ந்து, ரொம்ப சரி அப்படித்தான் செய்ய வேண்டும் என்று, ஆமோதித்தார் .அந்தக் கிழவன் சொன்னது என்னவென்றால்,மனிதனால் அடைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது. அது வேறு எங்கேயும் இல்லை. அவனுக்குள்ளேயே இருக்கிறது. அவனுக்குள் மறைந்து கொள்ளுங்கள் என்பதே. அதிலிருந்து கடவுள் அங்கேயேதான் மறைந்து கொண்டு இருக்கிறார். மனிதன் நினைக்காத இடம் அது தான்.ஆகவே மிக அருகில் உள்ளதை, உங்கள் அகங்காரம் ஏறெடுத்தும் பார்க்காது. அதில் அதற்கு சுவாரசியமும் இல்லை . ஆகவேதான் நீங்கள் உண்மையை தவற விட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் .
- 72
Added a post
ஒரு அழகான பெண் தன் வீட்டு வாசலில் தினம் ஒரு அழகான இளைஞன் நிற்பதை பார்க்கிறாள்! தினம் வருகிறான் ஒரு மணி நேரம் நிற்கிறான்! எப்பவும் மொபைலை பார்த்து கொண்டு இருக்கிறான் ஆனால் அந்த பெண்ணை பார்த்து எந்த சைகையும் செய்யவில்லை! அப்பப்ப பார்ப்பதோடு சரி!அவன் வருவதும் இவள் பார்ப்பதும் என இப்படியே ஒரு வருடம் ஓடியது!அவளுக்கு நன்றாக புரிந்தது அவன் தன்னை காதலிக்கிறான் என்று! ஆனால் தன் காதலை சொல்ல வெட்க படுகிறான் என்று . சரி நாம தான் இந்த காதலை கூட செய்ய வேண்டும் என்று தன் பெற்றோரிடம் விசயத்தை சொல்லி அனுமதி வாங்க!பெற்றோர்களும் சரிம்மா ! ஆனால் எதற்கும் ஒரு வாட்டி அந்த பையனிடம் ஒரு வார்த்தை பேசி விடு என்று சொல்ல!அன்று அவன் வர! அவனிடம் போய் ஹலோ! என் பெயர் ஜெனி.இது எங்க வீடு தான் ! என்று சொல்ல !அவனும் எனக்கு தெரியும் என்று சொல்ல!எனக்கு உங்களை மிகவும் பிடித்து இருக்கு! கடந்த ஒரு வருடமாக நீங்கள் எங்கள் வீட்டுக்கு கீழே இருந்து என்னிடம் காதலை சொல்லாமல் பொறுமையாக இருந்தது எனக்கு உங்களை மேலும் பிடித்து இருக்கு!ஐ லவ் யூ! என்று சொல்ல!அவன் சாரி! தங்கச்சி! நீங்கள் என்னை தப்பா புரிந்து கொண்டீர்கள்!உங்கள் வீட்டில் நீங்கள் வை பை ( Wi - Fi ) லாக் போடாமல் இருப்பதால் கடந்த ஒரு வருடமாக இங்க இருந்து பிரவுஸ் பண்ணி கொண்டு இருந்தேன்!அப்புறம் தங்கச்சி! உங்க வீட்டு கீழே இருந்து தான் என் காதலிக்கு பேஸ்புக்கில் மெசேஜ் பண்ணி கொண்டு இருப்பேன் என்று சொல்ல!அவளுக்கு சற்று மயக்கம் வந்தது.
- 74
Added article
ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவரது உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி விட்டதாக அவரது மகன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- 75
இலகுவாக வெற்றிக்கனியை பறிக்க முடியாது. முதற்படியை விடாமுயற்சியில் கடந்துவிடுங்கள். படிப்படியாக உயர்ந்து விடலாம்.
- 94
Added a post
ஒரு கல்யாண வீட்டு ( buffet) பஃபே முறையில் திருமண விருந்து நடந்து கொண்டிருந்தது அங்க குலாப் ஜாமுன் தர்றவரு வாங்கிட்டு போற குட்டி பசங்க அத்தனை பேருக்கும் சந்தன பொட்டு வைத்து அனுப்பி கொண்டிருந்தார்நம்ம வாய் சும்மா இல்லாம பரவா இல்லையே வரவேற்ப்பில் தான் சந்தனம் கல்கண்டு தந்து இன்வைட் செய்யுராங்க நீங்க கூட இவ்வளவு பாந்தமா அதுவும் குழந்தைகளுக்கு உபசரிப்பு செய்யுறீங்களேன்னு கேக்கஅவர் சொல்றார் அட நீங்க வேற மேடம் மொத்தம் 600 பேருக்கு குலாப் ஜாமுன் கணக்கு தான் சில குட்டி பசங்க திரும்ப திரும்ப வந்து வாங்கிட்டு போயிடராங்க என்னோட மேனேஜர் என்னை தான் கேள்வி கேட்கிறார் அதான் இந்த ஐடியாவை ஃபாலோ பண்றேன் என்று சொன்னார்.
- 101
Added a news
48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பமாகவுள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சேவையாளர் பற்றாக்குறை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.000
- 315
Added a news
சர்வதேச ரீதியில் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் சபைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி குறித்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) முதலிடத்தில் உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிக வருமானத்தை ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வருடாந்த வருமானம் இந்திய மதிப்பில் 18,760 கோடி என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் குறித்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையும் தரப்படுத்தப்பட்டுள்ளன. வருடமொன்றிற்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா 79 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை 59 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வருமானமாக ஈட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நான்காம் இடத்திலும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஐந்தாவது இடத்திலும் உள்ளதுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் 8 ஆவது இடத்தில் உள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மற்றும் நியுசிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
- 317
Added a news
கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.அதன்படி வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளனர்.பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 412 வீதி விபத்துக்களில் 431 பேர் உயிரிழந்தனர். அந்த காலப்பகுதியினுள் நாடளாவிய ரீதியாக 925 பாரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.பொலிஸ் அறிக்கைகளுக்கு அமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது000
- 320
Added a news
இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.அத்துடன், தெற்காசியாவில் இலங்கை, இந்தியா, சீனா ஆகியன ஒன்றிணைந்து 'கூட்டுச் செயற்றிட்டமொன்றை' முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் ஊடகப்பிரதிநிதிகளுக்கும் இடையில், உரையாடல் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இலங்கையுடன் சீனாவே முதன்முதலாக கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டது. அந்த வகையில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு முதலில் இணங்கிய நாடாகவும் சீனா இருக்கின்றது. ஆனால் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இன்னமும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.அதேநேரம், இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பை சீனா மேற்கொண்டதன் மூலமாக பெருந்தொகையான நிதியை இழந்துள்ளது. குறிப்பாக இலங்கையுடனான சீனாவின் கடன்மறுசீரமைப்பு இணக்கத்தினால் 7பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனாவின் எக்ஸிம் வங்கி இழந்துள்ளது.இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்காக சீனா பெருந்தியாகத்தைச் செய்துள்ளதோடு அதிகளவான பங்களிப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் அந்த விடயங்களை சீனா பிரசாரம் செய்வதில்லை. என்றார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த ஆண்டின் முற்பகுதியில் சீனாவுக்கு விஜயம் செய்தார்.அவரது விஜயத்தின்போது 15 உடன்படிக்கைகள் கைச்சத்தாகியுள்ளதோடு, அவை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர். இதன்மூலமாக இருநாட்டு பிரஜைகளும் அதிகளவான நன்மைகளை அடையவுள்ளனர் என்றார்000
- 319
Added a news
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். வெளியுறவு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செலவினத் தலைப்பு விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ஹேரத்இ தற்போதைய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடனான உறவுகளை பிளவுகளை உருவாக்காமல் வெற்றிகரமாக வலுப்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்தினார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிக் கொள்கையை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார். கூடுதலாக சலுகையை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு குழு அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரும் என்றும்இ விவாதங்கள் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறையை அமைச்சர் ஹேரத் மேலும் விளக்கினார் 000
- 320
Added a post
வாழை இலைக்குளியல் செய்வதால் போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்....வாழை இலையால் நம்முடைய உடம்பு முழுவதும் மறைக்கப்பட்டு வெயிலில் ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். சுவாசத்தை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமில வாயுவை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.வாழை இலைக்குளியல்செய்முறை:1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு எட்டு இலைகள் வரை தேவைப்படும்...2.தரையில் ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால் லேசாக சிதைத்து போடவேண்டும்.4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்றவருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து தேன் மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும். பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.வாழைகுளியல் பலன்கள்:""''"'''"''"""""""'"'"'"1.உடல் எடை சீராக இருக்கும்.2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்.3.தோல் நோய்கள் குணமாகும்.4.ஆஸ்துமா, இழுப்பு , அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்.5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்.6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்...குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்..கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்..வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும். அதீத மன அழுத்தம், மனக் கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள் தவிர்க்கலாம்குறிப்பு : இதை படித்து விட்டு , முறையான ஆலோசனையைப் பெற்று, பின்னரே செய்து பாருங்கள்.
- 375
Added a post
மேஷம்கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பேச்சு வன்மை மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்ரிஷபம்வியாபார பணிகளில் புதிய நபரின் அறிமுகங்கள் உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஊதா மிதுனம்புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு பணிகளில் சாதகமான சூழல் அமையும். வசதி வாய்ப்புகளை பெருக்கி கொள்வதற்கான சிந்தனைகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சலனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்புகடகம்உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உருவாகும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் துரிதமும், விவேகமும் வெளிப்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சைசிம்மம்குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். எதிலும் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக முடியும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : நீலம்கன்னிபலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உறவினர்கள் வருகை மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தம்பதியர்களுக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தடங்கல் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுதுலாம்வியாபார பயணங்களில் சாதகமான சூழல்கள் அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். துணைவரை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம்விருச்சிகம்எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புதனுசுசெய்கின்ற முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இன்சூரன்ஸ் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்கள். தொழில் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புமகரம்கணவன், மனைவி இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் சோர்வின்றி செயல்படவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். எண்ணிய சில பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைகும்பம்உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்நடை விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். பயணங்களின் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் வேண்டும். பயனற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமீனம்பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
- 380
Added a post
குரோதி வருடம் பங்குனி மாதம் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.3.2025.சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 04.35 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று காலை 11.27 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.சதயம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 383
Added a post
ரயில் தண்டவாளத்தை உடைத்த சிறு கற்களால் நிரப்பவதை Track ballast என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். நீங்கள் விரும்பிய கற்களையெல்லாம் இங்கு போட்டு நிரப்ப முடியாது. கூர் முனைகள் இல்லாத உருண்டைக் கற்களே தேவைப்படுகின்றன. தண்டவாளங்களுக்கு உதவும் பணியை பிழையான கற்கள் கெடுத்து விடும்.ரயில்வே தண்டவாளங்களின் உள்ளேயும் தண்டவாளத்தைச் சுற்றியும் போடப்பட்டிருக்கும் சரளைக் கற்களின் பெயர், ‘பல்லாஸ்ட்’ (Ballast).. ‘ஒரு பாரத்தைச் சமப்படுத்தப் பயன்படுத்தப்படும் பாரம்’ என்று இதற்கு அர்த்தம். ‘பர்மனென்ட் வே’ என்று அழைக்கப்படும் நிரந்தரமான ரயில் பாதை என்பது, இரு இரும்புத் தண்டவாளங்கள், அவற்றின் இடையே இடவெளி விட்டுப் போடப்பட்ட ஸ்லீப்பர் கட்டைகள் மற்றும் சரளைக்கற்கள் அடங்கிய ஒரு சாலைப் படுகை. தண்டவாளங்களின் மேல் ரயில் செல்லும்போது, அதன் சக்கரங்களில் இருந்து வெளிப்படும் விசை அல்லது அழுத்தம் தண்டவாளங்கள், ஸ்லீப்பர் கட்டைகள், சரளைக்கற்களின் படுகைக்கு மாற்றப்படும் போது, அந்த விசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். இந்த சரளைப் படுகைக்கு, குறிப்பிட்ட அளவில் உடைக்கப்பட்ட கற்கள் பயன்படுத்தப்படும். இந்த கல் படுகை அமைக்கப்படும் கனத்தைப் பொறுத்தே, அந்த ரயில் பாதையின் உறுதி அமையும். பொதுவாக, அகல ரயில் பாதைகளுக்கு 25 செ.மீ. உயரத்திலும், மீட்டர் ரயில் பாதைகளுக்கு 20 செ.மீ. உயரத்திலும் சரளைக் கல் படுகை அமைக்கப்படும். கன மழையைச் சமாளிக்கும் விதமாக, 60 முதல் 72 செ.மீ. உயரம்கூடப் போடப்படுகின்றன. இந்தப் படுகைகள், ரயில்வே துறையால் அவ்வப்போது சோதனை செய்யப்படும். இந்த நவீன யுகத்தில், கல் படுகைகளை ஒழுங்குபடுத்த நவீனத் தொழில்நுட்ப இயந்திரங்களும் வந்துவிட்டன.தண்டவாளத்தில் எடை அதிகமான ரயில்கள் செல்வதற்கான ஆதரவை இந்தக் கற்கள் தருவதோடு, வேறு நன்மைகளும் கற்களால் கிடைக்கின்றன..தாவரங்கள் புதிதாக முளைப்பதை இந்தக் கற்கள் தடுக்கின்றன. தாவரங்கள் வளர்ந்து வேர்களை பரப்பினால், தண்டவாளத்தின் உறுதி குறையும். களைகளின் வளர்ச்சி மற்றும் இதர தாவரங்களின் வளர்ச்சியினால் தண்டவாளங்களில் ரயில் செல்வதில் இடையூறு ஏற்படாமல் தடுக்கவே ஜல்லிக் கற்கள் போடப்பட்டுள்ளன.மழை நீர் தேங்காதிருப்பதையும் இந்தக் கற்கள் தடுக்கின்றன. கற்கள் வழியாக நீர் கசிந்து ஓடிவிடுகின்றது.
- 388
உங்கள் வாழ்க்கையில் இந்த ஐந்து பேரை ஒரு நாளும் மறக்காதீர்கள்பசியில் நமக்கு உணவு கொடுத்தவர்கள்கஷ்டத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்துன்பத்தில் நம்மை ஆறுதல் படுத்தியவர்கள்நோயுற்றிருக்கும் போது நம்மை விசாரித்தவர்கள்நீங்க கஷ்டப்படும்போது உங்களை விட்டு போனவர்கள்
- 526
Added a news
கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே ஹரி ஆனந்தசங்கரி ஆவார். இவர் இலங்கையில் இருந்து தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து கனடா சென்றார்.கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை ஆரம்பித்ததுடன், கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் ஹரி ஆனந்தசங்கரி முன்னின்று செயற்பட்டுள்ளார்.கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒண்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தார்.இந்நிலையில் கனடாவின் 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி நேற்றைய தினம் பதவியேற்றார்.புதிய அமைச்சரவை பதவியேற்பின் போது ஹரி அனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகவும், அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் - இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- 537
Added a post
மனைவி - நைட்டு என்ன சமைக்கட்டும் ங்க..??கணவன் ~ சப்பாத்தி,சன்னா மசாலா...மனைவி - இன்னைக்கு ரெம்ப டையேர்டா இருக்கு தோசையே செஞ்சிட்றேன்.கணவன் - அப்றம் ஏன்டா என்கிட்ட கேட்ட..?!மனைவி - நீங்க என்ன சொல்றிங்கன்னு பாக்கதான்...கணவன் - சரி... சரி...(ஒரு மாதிரி ஏமாற்றம் தெரிந்தது..)மனைவி - சரி... தோசைக்கு தொட்டுக்க சட்னி வைக்கவா..?! இல்லை சாம்பார் வைக்கவா..?!இல்லன்னா சட்னி,சாம்பார் ரெண்டும் சேர்த்து வைக்கவா..?!இல்ல இட்லி சாம்பார் மற்ற வைக்கவா..?! இல்ல உங்களுக்கு பிடித்த பருப்பு சாம்பார் வைக்கவா..?!இல்லன்னா தக்காளி சாம்பார் வைக்கவா..?!வெங்காய சாம்பார் வைக்கவா..?!காய்கறி சாம்பாரா..?!இல்ல தேங்கா சட்னி அறைக்கவா..?!வத்தல் மிளகாய் சட்னி அறைக்கவா..?!பச்ச மிளகாய் சட்டினியா..??பொட்டு கடல சட்னியா..?!நிலகடல சட்னியா...?!கணவன் - நில்லு... ஒரு சாம்பார்ல பருப்பு தக்காளி வெங்காயம் காய்கறி எல்லாம் தான போடுவ..??மனைவி - ஆமா... கணவன் - அப்றம் என்ன..??என்னமோ வெரைட்டியா சமைக்கிற மாதிரி ஒரே சாம்பாரை ஏழு விதமா கேக்குற...?!அதே மாதிரி சட்டினிக்கு தேங்காய் பொட்டு கடல பச்ச மிளகாய் தானே போடுவ...இல்லன்ன பச்ச மிளகாய்க்கு பதிலா வத்தள் மிளகாய் போடுவ..இல்ல பொட்டு கடலைக்கு பதிலா நிலக்கடலைய போடுவ...இப்ப நீ என்னமோ மெனக்கெட்டு புதுசா சமைக்க போறவளாட்டம் பிரிச்சு பிரிச்சு கேட்டுட்ருக்க..?!அதாவது நீ நிறைய வெரைட்டியா பண்ற மாதிரி நா நினைக்கனும் அதான..?!மனைவி ~ ஷ்ஷ்ஷ்.. ஷ்ஷ்ஷ்...சத்தமா பேசாதிங்க...கணவன் - ஏன்... ஏன்...?!மனைவி - நா நம்ம குழந்தை கிட்ட தினம் இப்டிதான் கேட்பேன்.. இல்லன்னா அவுங்க எப்பவும்ஒரே சாம்பார்... ஒரே சட்டினின்னு சளிச்சிக்கிறாங்க...கணவன் - !!!!!!!!!!!!!!!!!
- 537