Ads

'தளபதி 66' பூஜையில் விஜய், ராஷ்மிகா

தளபதி 66

  • 1102
  • More
  • 724
  • More
  • 693
  • More
  • 724
  • More
  • 702
  • More
  • 718
  • More
  • 728
  • More
Comments (0)
Login or Join to comment.
  • 30
  • 79
  • 80
  • 80
  • 80
·
Added a news
இந்திய குடிமக்கள் மீது இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா? காங்கிரசா? என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, 2020ல் கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கை தான் முதன்முறையாக தாய்மொழியில் கற்பதை வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய குடிமக்கள் மீது இந்தியை திணித்தது யார்? பிரதமர் மோடியா? காங்கிரசா? இந்தி திணிப்பு போன்ற இல்லாத விஷயங்களை ராகுல் பேசியுள்ளார் என்றும் ராகுலின் பாட்டி இந்திரா காலத்திலிருந்து தேசிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம் என இருந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழன் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றது பிரதமர் மோடி என அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.  ஆனால் அன்னிய மண்ணிலிருந்து தமிழ்நாட்டை இழிவுபடுத்தியது ராகுல் காந்தி என அவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி தங்கள் தாய்மொழிக்காக என்ன செய்தார் என்று பலர் கேள்வி கேட்கலாம் என்றும் பிரதமர் மோடி நமது தாய்மொழியான தமிழுக்கு என்ன செய்தார் என்பதை வெளிப்படுத்துகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.74 வது ஐநா பொதுச் சபையில் முதன்முறையாக பிரதமர் மோடி தமிழில் பேசியதை சுட்டி காட்டிய அண்ணாமலை,  யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று பிரதமர் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார். மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவாக, அவரது பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப்பட்டது என்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • 143
·
Added article
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் மனசிலாயோ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ளது.அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலுக்கு சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதி உள்ளனர். அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தி உள்ளனர் என்பதும் 27 ஆண்டுகளுக்கு பின்னர் மலேசியா வாசுதேவன் குரலை ரசிகர்கள் கேட்க முடிந்தது ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 157
·
Added a news
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.தங்கள் பகுதியில் உள்ள கிராம அலுவலர் அல்லது தோட்ட கண்காணிப்பாளர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
  • 681
·
Added a news
விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச ஊழியர்கள், விடுமுறை நிறைவடைந்த பின்னர் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயமானது பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியான சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், வெளிநாட்டு விடுமுறை காலத்தை நீடிக்க வேண்டுமாயின் முதலாவது விடுமுறை காலம் நிறைவடைவதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென அரச நிறுவன பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை காலத்தை நீடித்துக்கொள்ளும் அனுமதியை பெறுவதில் ஏற்படும் சிக்கல் ஏற்கனவே பெறப்பட்ட விடுமுறை காலப்பகுதிக்குள் தீர்க்கப்படாவிட்டால் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 682
·
Added a news
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இந்த ஆண்டு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபா வரை ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் என்றும்,பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 683
·
Added a news
எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது.அதேவேளை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த பின்னர் வாக்கெண்ணும் நிலையங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது000
  • 687
·
Added a news
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37 ஆயிரத்து 233 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதற்கமைய மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 490 ஆகும்.அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது000
  • 687
·
Added a news
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் என்ற தனது சாதனையை ஒருபோதும் முறியடிக்க வாய்ப்பில்லை என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.சமகாலத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் தனது சாதனையை முறியடிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், டெஸ்ட் வடிவத்தின் எதிர்காலம் குறித்து தான் நிச்சயம் கவலைப்படுவதாகவும் கூறியுள்ளார்.இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி இந்தத் தொடரை இழந்துள்ளதாகவும், ஏனெனில் போட்டி ஈர்ப்புகள் அவர்களின் ‘நிலைத்தன்மையை’ கெடுத்துவிட்டதாகவும் முரளி சுட்டிக்காட்டியுள்ளார்.800 விக்கெட்டுகள் என்ற எனது சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமானது, ஏனென்றால் தற்போது குறுகிய வடிவ கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.மேலும், நாங்கள் 20 ஆண்டுகள் வரை விளையாடினோம். ஆனால் இப்போது வீரர்கள் அவ்வளவு காலம் விளையாடும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.தற்போது விளையாடும் இரண்டு சுழல்பந்து வீச்சாளர்களான அவுஸ்திரேலியாவின் நாதன் லயன் 530, மற்றும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் 516 விக்கெட்டுகளை கைப்பற்றி பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.ஒவ்வொரு நாடும் தற்போது ஆறு அல்லது ஏழு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. வேறு சில நாடுகளில் அதிகம் பேர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதில்லை எனவும் முரளி குறிப்பிட்டுள்ளார்.000
  • 691
·
Added a news
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு ஒன்பது விக்கெட்டுகள் மீதமிருக்க 125 ஓட்டங்கள் மாத்திரம் தேவை என்ற நிலை உள்ளது.இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.முதலிரு போட்டிகளையும் இங்கிலாந்து அணி வெற்றி கொண்டு தொடரில் முன்னிலையில் இருக்க, இறுதி டெஸ்ட் போட்டி லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 325 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, தனது முதல் இன்னிங்ஸில் 263 ஓட்டங்களை எடுத்தது.இதனால், 62 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வெறும் 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பந்து வீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளை அதிகபடியாக எடுத்தார். அதன்படி, இலங்கையின் வெற்றிக்கு 219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.அந்த இலக்கனை நோக்கி துடுப்பெடுத்தாடி வந்த இலங்கை, போட்டியின் மூன்றாம் நாள் (நேற்று) ஆட்ட நிறைவில் 15 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களை பெற்றுள்ளது.திமுத் கருணாரத்ன 8 ஓட்டங்ளுடன் ஆட்டமிழக்க, பத்தும் நிஸ்ஸங்க 53 ஓட்டங்களுடனும், குசல் மெண்டீஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். இன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.000
  • 693
·
Added a news
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், வீடுகளுக்கு பேரணியாக சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க சட்டம் இடமளிக்கவில்லை என்றும் ஐந்து பேருக்கு மேற்படாத குழு மாத்திரமே வீடுகளுக்குச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே, வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுகின்றமை தொடர்பிலும் அவர் தகவல் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது000
  • 695
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 24 ஆம் தேதி மேஷம் -ராசி: வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். வரவுகளில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை அளிக்கும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  ரிஷபம் ராசி: பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கை துணைவர் வழியில் அனுசரித்துச் செல்லவும். சகோதரர் வகையில் ஆதரவு ஏற்படும். வரவுகளால் ஆபரண சேர்க்கை உண்டாகும். வர்த்தகப் பணிகளில் லாபம் மேம்படும். புதியவர்களின் அறிமுகங்களால் உற்சாகம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்மிதுனம் -ராசி: நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் சில மாற்றங்கள் மனதளவில் ஏற்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. ஓய்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்புகடகம் -ராசி: மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். இடமாற்ற முயற்சி கைகூடும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்புசிம்மம் -ராசி:அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பிரீதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெண்மை கன்னி -ராசி: எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மாற்றமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் தீர்வு காண்பீர்கள். சிறு தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பச்சைதுலாம் -ராசி: கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் கிடைக்கும். உத்தியோக செயல்களில் துரிதம் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்விருச்சிகம்- ராசி: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலை ஆட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடுகள் வேண்டும். திடீர் மாற்றங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். கலைப் பொருட்கள் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். முன் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் தனுசு -ராசி: விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். இறை பணிகளில் மதிப்பு கிடைக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பணிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்மகரம் -ராசி:வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதம் குறையும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்கும்பம் –ராசி:புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். உறவினர்கள் வழியில் சுபிட்சம் ஏற்படும். சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். அரசு துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவு பிறக்கும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மீனம் -ராசி: புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 694
·
Added a news
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விசேட தினமாக எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி 8ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டது.எனினும், வாக்குச் சீட்டு விநியோகம் வரும் 14ஆம் திகதியும் நடைபெறும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 698
ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 24 ஆம் தேதி திங்கட்கிழமை 9.9.2024.சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 06.26 வரை சஷ்டி. பின்னர் சப்தமி .இன்று மாலை 03.49 வரை விசாகம். பின்னர் அனுஷம்.ரேவதி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 733
  • 747
  • 1163
நைட்டு சாப்பாடு என்ன?""தோசை தான்..""தொட்டுக்க என்ன குழம்பு?""புதினா மல்லி சட்னி.. தக்காளி சட்னி..""வாவ்.. எப்பவும் ஏதாவது ஒரு சட்னி தான் வைப்ப.. இன்னைக்கு 2 வச்சுருக்கியே.. என்ன விசேஷம்?!""ஆமாப்பா.. இத்தனை வருஷமா நான் உங்களுக்கு ஒண்ணுமே செய்யாம பட்டினி போட்டேன் பாருங்க..ஏதோ காணாதத கண்ட மாதிரி விசேஷமானு வேற கேட்குறீங்க..""சாரி மா.. தெரியாம சொல்லிட்டேன்..""இல்ல நீங்க தெரிஞ்சே தான் பேசுறீங்க என்னை..""என்ன இது சட்னி ரெண்டும் பிளாஸ்டிக் டப்பால இருக்கு..""ஆமா.. காலைல சாப்பிட ஹோட்டலில் பொங்கல் வாங்கினேன். அதுக்கு போய் தொட்டுக்க புதினா சட்னியும் தக்காளி சட்னியும் தர்றானுங்க... குப்பைலயா போட முடியும்?! அதான் உங்களுக்கு எடுத்து வச்சேன்.. நீங்க சாப்பிடுங்க.."கணவன்.....!!!!!!
  • 1166
·
Added a recipe
காலை/மாலை உணவுகள் தக்காளி, வெங்காயம் இரண்டையும் வெட்டி வைக்கவும். மிளகாய் வத்தலை இரண்டாக ஒடித்து வைத்துக் கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை வறுத்து தனியே வைக்கவும்.அதே எண்ணெயில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..தக்காளி நன்கு வதங்கியதும் சீரகம், சிறிது உப்பு,மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும். வதக்கிய பொருள்களை சிறிது நேரம் ஆறவிடவும்.நன்கு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து தோசை மாவோடு சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் தேய்க்கவும். தோசைக்கல் சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விடவும்.ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து விடவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்....
  • 1171
·
Added a recipe
காலை/மாலை உணவுகள் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் முழுமல்லி , ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு , அரை ஸ்பூன் சீரகம் , 5 காஞ்சமிளகாய் சேர்த்து நல்ல வறுத்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் பொடி செய்து எடுத்துக்கொள்ளுங்கள்ஒரு குக்கரில் 100 கிராம் துவரம்பருப்பு , மஞ்சள்தூள்,உப்பு , வீட்டில் இருக்கும் காய்கறி சேர்த்து ரெண்டு விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை ,2 காஞ்சமிளகாய் , வெங்காயம் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கிய பிறகு அரைத்து வைத்த மசாலா பொடி சேர்த்து ஒரு வதக்கு பிறகு ரெடி செய்த பருப்பை கொட்டவும் அதில் புளிக்கரைசலை ஊற்றி 4 கொதி வந்தவுடன் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்
  • 1172
எப்படி இருக்கு இந்த வீட்டின் டிசைன்-?
  • 1174
  • 1176
  • 1179
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 23 ஆம் தேதி மேஷம் -ராசி: சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் பொறுமை வேண்டும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையாட்கள் மத்தியில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். பதற்றமான சூழல் மறையும். பள்ளிப் பருவ நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்  ரிஷபம் ராசி: சக ஊழியர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலைச்சல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம்மிதுனம் -ராசி: உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அசதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்கடகம் -ராசி: அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். விவசாய செயல்களில் பொறுமை வேண்டும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெண்மைசிம்மம் -ராசி:புதிய முயற்சியால் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். மனதில் சுபகாரிய எண்ணங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பேச்சுத் திறமையால் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் அன்பாக இருப்பார்கள். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் கன்னி -ராசி: நண்பர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். இறை பணிகளில் ஆர்வம் ஏற்படும். உணவுகளில் சற்று கவனம் வேண்டும். மனதில் புதிய இலக்குகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். செலவுகளால் சில நெருக்கடியான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புதுலாம் -ராசி: எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்கவும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புவிருச்சிகம்- ராசி: வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வேள்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். பயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் தனுசு -ராசி: இணையம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கால்நடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமகரம் -ராசி:உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காப்பீடு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்கும்பம் –ராசி:குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைப்பீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமீனம் -ராசி: புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் மேம்படும். வேகத்தை விட அமைதியை கடைபிடிக்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 1457
ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.9.2024.சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 05.15 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி .இன்று பிற்பகல் 01.58 வரை சுவாதி. பின்னர் விசாகம்.உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 1487