Ads

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

0 0 0 0 0 0
 • 66
 • 44
 • 41
 • 44
 • 36
 • 41
Comments (0)
Author
 ·   · 14 albums
 •  · 12 friends
 •  · 12 followers
Info
Created:
Updated:
Recent Images
 • 32
 • 33
 • 32
 • 36
 • 32
 • 31
 • 36
 • 33
 • 30
 • 41
 • 36
 • 44
 • 41
 • 44
 • 39
 • 38
 • 37
 • 38
 • 48
 • 40
 • 41
 • 49
 • 42
 • 45
Added article 
ராஷிகன்னா தற்போது கைவசம் அரண்மனை 3-ம் பாகம், துக்ளக் தர்பார், சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன.ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், “உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்கள். எவ்வளவு நாள்தான் இப்படி இருக்க முடியும். போராடித்தான் ஆக வேண்டும் என்ற நிலைமை உள்ளது. அதனால் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கொஞ்சம் குறைந்துள்ள நிலையில் வேறு வழியில்லாமல் நான் நடிக்கும் தேங்க் யூ என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பி வந்துள்ளேன்.படப்பிடிப்பில் எனக்கு கொரோனா பயம் இருந்தது. படப்பிடிப்பு அரங்கில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வார்கள். முடிந்த அளவு 30 பேருக்கு உள்ளேயே வைத்து படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு பகுதியில் இருந்து இன்னொரு இடத்துக்கு போக வாகனங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடித்தோம். ஜாக்கிரதையாக படப்பிடிப்பில் பங்கேற்றோம். இது மறக்க முடியாத அனுபவம். கஷ்டத்தில் எதிர்நீச்சல் போடுவது மாதிரி இருந்தது'' என்றார்.
 • 12
Added article 
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த வாரம் வெள்ளி கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் நடிகர் சஞ்சாரி விஜய் (வயது 38) சிக்கினார்.  இதனை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.நேற்று (செவ்வாய் கிழமை) அதிகாலை 3.34 மணியளவில் அவர் உயிரிழந்து உள்ளார்.  அவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டன.கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த ரங்கப்பா ஹாக்பித்னா என்ற அறிமுக படத்தில் நடிக்க தொடங்கிய அவர், நானு அவனல்ல அவளு என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றுள்ளார். அந்த படத்தில் அவர் திருநங்கை வேடமிட்டு நடித்தது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. 
 • 11
Added a news 
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்து அடுத்தடுத்து அலைகளாக வந்து வைரஸ் இன்னமும் பல நாடுகளில் வீரியத்துடன் பரவி வருகிறது. மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் போடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், நம்பிக்கை அளிக்கும் வகையில் தொற்று பரவல் சற்று தணிந்து வருகிறது.  எனினும் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பிரேசில் முதலிடம் வகிக்கிறது. வோர்ல்டோமீட்டர்ஸ் தரவுகளின் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 62 ஆயிரமாக உள்ளது. பிரேசிலில் 78 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினாவில் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • 13
Added a news 
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.73 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 177,390,108-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 161,820,450- பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 37 ஆயிரத்து 481 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 11,732,177-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 • 12
Added a news 
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் இன்று (15) மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 64 வயதுடைய முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காணியில் இருந்த குப்பைகளை கூட்டி நெருப்பு வைத்த போது அதிலிருந்த குண்டு வெடித்ததில் குறித்து அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.அம்மன் கோயில் வீதி, 5 ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 64 வயதுடைய இந்திரன் மரியரத்திணம் எனும் தாயாரே காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
 • 12
Added a news 
பொலிஸாருக்கு தகவல் வழங்குபவர்களின் அடையாளம் எந்த சூழ்நிலையிலும் வௌிப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
 • 14
Good Morning.....
 • 13
Added a news 
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.இதனையடுத்து, சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகினர். ஆனால், சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை. சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராகினர்.இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்துள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர் டேராடூன் விரைந்துள்ளனர்.
 • 40
Added a news 
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 157பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து மூவாயிரத்து 285பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 944பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 15ஆயிரத்து 954பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 670பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 13இலட்சத்து 61ஆயிரத்து 387பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 • 40
Added a news 
கொவிட் மரணங்கள் அதிகரித்தாலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை காணக்கூடியதாய் உள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.ராகம போதனா வைத்தியசாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.பயணக் கட்டுப்பாட்டை அரங்சாங்கம் தற்போது நீட்டித்துள்ளது. மருத்துவ பார்வையில் இது மிகவும் நல்லது. எனினும் நாட்டு மக்களுக்கு அசௌகரியும் உள்ளது. தற்போது நோயாளர்கள் குறைவடைந்து வருகின்றனர். மரணங்கள் குறைவடைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் செல்லும். உருமாறிய புதிய வைரஸ் காரணமாக தொற்று ஏற்பட்டு 10 நாட்களுக்குள் மரணம் ஏற்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
 • 41
Added article 
சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் மஹா. இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கியுள்ளார். இப்படதில் தனது கதையை வைத்துதனக்கே தெரியாமல் இப்படத்தை முடித்து ஓடிடியில் வெளியிட உள்ளதாகவும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஜமீல் வழக்கு தொடர்ந்திருந்தார்.இப்படத்தில் தனக்கு ஊதியமாக தர ஒப்புக்கொண்ட ரூ 24 லட்சத்தில் வெறும் 8 லட்சத்து 15 ஆயிரம்தான் தந்துள்ளனர். மீதிப்பணத்தை தர உத்தரவேண்டுமெனவும், இப்படத்தை என்னை எடுக்க விடாமல் செய்ததற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடவேண்டுமென ஜமீல் தனது மனுவில் கூறியிருந்தார்.இயக்குநர் ஜமீலுக்கு சம்பள பாக்கியில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் வழங்கத் தயாராக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதை அடுத்து ஜமீல் அதை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இயக்குநர் சங்கத்தில் இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறப்பட்டது. இப்படத்தை வெளியிட இடைக்கால தடைவிதிக்கக் கூறிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 28 ஆம்தேதி தள்ளி வைத்து அன்று இரு தரப்பினரும் எழுத்து பூர்வமான உத்தரவாதம் தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
 • 39
Added article 
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.லாக்டவுன்னால் சில நடிகைகளின் பழைய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக கொடிகட்டி வலம் வந்தவர் கமாலினி முகர்ஜி. தமிழ் சினிமாவில் இவர் கிளாமர் காட்சிகளில் நடித்தது இல்லை. ஆனாலும் தமிழில் இவருக்கு ஓரளவு ரசிகர்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.சில வருடங்களுக்கு முன் இவர் கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
 • 43
Added article 
அசின் கேரளாவில் பிறந்து நம் தென்னிந்திய சினிமாவில் தன் நடிப்பை ஆரம்பித்து, பாலிவுட் வரை சென்றவர்.  சிறந்த பரதநாட்டிய டான்சர், எட்டு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர், தன் அனைத்து படங்களுக்கும் தானே டப்பிங் பேசியவர். சினிமாவில் நடிப்பு மட்டும் அல்லாது பல விளம்பரங்களிலும் நடித்தவர். மிராண்டா, தனிஷ்க், லக்ஸ் போன்றவற்றின் பிராண்ட் அம்பாசடர். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் என பெரும் ஹீரோக்களின் வெற்றிப்படங்களில் நடித்து கலக்கியவர்.கோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருந்த பொழுது, கஜினி ஹிந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் நடித்தார். அதுவே அவரின் பாலிவுட் என்ட்ரி. பின்னர் ஹிந்தி படங்களில் பிஸியானார்.அக்‌ஷய்குமாருடன் நடிக்கும் போது அவர் மூலமாக அவருடைய நண்பரான, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபரான ராகுல் ஷர்மாவுடன் காதல் ஏற்பட, தன் கைவசம் இருந்த படங்களை நடித்து முடித்துவிட்டு  2016 ல் அவரை மணந்துக்கொண்டார்.இந்த தம்பதியருக்கு தற்போது மூன்று வயதில் அரின்  என்கிற பெண் குழந்தை இருக்கிறார். அசின் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வாடிக்கையான ஒன்று. சமீபத்தில்  மூன்று வயது அரினின் வார இறுதி கதக் பயிற்சி என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நிறைய லைக்ஸ் குவிந்து வருகிறது.
 • 42
Added a post 
ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் பஞ்சசபைகளில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். சிதம்பரம் கோயில் ஐந்து சுற்று பிராகாரங்களைக் கொண்டது. இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை நேர் எதிரே அமையப்பெறாமல் சிறிது இடப்புறம் தள்ளி அமைந்துள்ளது. இது மனித உடலில் இதயம் இடப்புறம்  அமைந்துள்ளதை ஒத்து இருக்கிறது என்கிறது தலபுராணம். மனித உடலை ஒத்து அமைந்துள்ளதாகக் கூறப்படும் இக்கோயிலின் கூரை, மனிதன் நாள் ஒன்றுக்கு மூச்சுவிடும் எண்ணிக்கையான 21,000 முறையைக் கணக்கில் கொண்டு அதே அளவு ஓடுகளால் வேயப்பட்டுள்ளன. மனித உடலில் ஓடும் நாடிகள் 72,000. இதே எண்ணிக்கையில் ஓடுகளைப் பதியச் செய்ய ஆணிகள்  அடிக்கப்பட்டுள்ளன. திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். ஆடலரசரான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு  வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம்  நடத்தப்படும்.
 • 43
Added a post 
இறைவன் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது ஆகும். இதனையே புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன. தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக்  கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது. வீடுகளில் தீபத்தை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம். 
 • 43
Added a news 
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.மரணித்தவர்களில் 32 ஆண்களும் 25 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 260ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 • 97
Added a news 
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் ´பகிரப்பட்ட செழுமையை´ அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.கொழும்பில் உள்ள ஷங்க்ரி-லா ஹோட்டலில் இருந்து டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பப்பட்ட முதலீட்டு இலங்கை மன்றத்தின் இந்தியா சார்ந்த அமர்வில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.ரப்பர், ஆடை மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில் துறைகளில் கவனம் செலுத்தி, சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு ஆர்வமுள்ள 6 முக்கிய துறைகளை தனது உரையின் போது இராஜாங்க அமைச்சர் எடுத்துரைத்தார்.விஷேட பொருளாதார வலயங்கள் மூலமாக, குறிப்பாக சமீபத்தில் நிறுவப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத்தின் ஊடாக விஷேட நிதிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலீட்டாளர்களை அவர் ஊக்குவித்தார்.
 • 100
உண்மை தானே?
 • 101
காலை வணக்கம்...
 • 101
Good Morning....
 • 102
Added article 
கொரோனா பரவல் காரணமாக சில நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை அனுமதிக்க மறுத்தன. தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக ரஜினிகாந்த் செல்லவுள்ள நிலையில் அதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அவருடன் சேர்ந்து குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். இந்நிலையில் இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி வைத்த கோரிக்கையை மத்திய அமைச்சர்கள் ஏற்ற நிலையில் அவருக்கு அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
 • 142
Added article 
ஆண்ட்ரியா  தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு மாடர்ன் உடையில் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துவிட்டார். இந்த கவர்ச்சியில் இது நம்ம ஆண்ட்ரியாவே இல்ல என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
 • 144
Added a news 
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்திகிறார்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளொன்று சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனிடையே, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். காணொளி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாத நிலையில், அதனை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா..? என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் அவர் கேட்டறிய உள்ளார்.
 • 145
Added a news 
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,000க்கு கீழ் குறைந்துள்ளது.கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த 24 தினங்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் 2வது நாளாக பதிவாகியுள்ளது. அதாவது,12,772 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,66,493ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக, கோவையில் இன்று 1,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 828 பேருக்கும், திருப்பூரில் 781 பேருக்கும், ஈரோட்டில் 1,295 பேருக்கும், சேலத்தில் 796 பேருக்கும் உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் இன்று 254 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,801ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 25,561 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 99 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது.
 • 144
Added a news 
பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவித்துள்ளார். மாற்று பொதியிடலுக்கான செலவு மற்றும் ஆயுள் காலம் தொடர்பில் கவனம் செலுத்தும் போது பிளாஸ்டிக் போத்தல்களைத் தடை செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.750 மில்லி லீட்டர் போத்தலை வாங்கும் அந்த போத்தலின மீள்சுழற்சிக்காக ஒரு தொகை பணம் வைப்பீடு ரீதியில் வைத்துக்கொள்ள ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.வெற்று போத்தலை மீள ஒப்படைப்பதன் மூலம் வைப்புத் தொகையை திருப்பிப்பெற முடியும் என்றும், வெற்று போத்தலை அப்புறப்படுத்தினாலும், மற்றொரு நபர் அத்தகைய போத்தல்களை சேகரித்து ஒப்படைப்பதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது..அது தொடர்பில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள வைப்புத்தொகை ரூ .10.00 தொடர்பான ஆலோசனைக்கு நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
 • 144
Added a news 
 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.அதன்படி, 48 அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெறும் அனைத்து கொரோனா மரணங்கள் தொடர்பான விபரங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.எனவே இனிவரும் காலங்களில் முந்தைய நாட்களில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான தகவல்கள் காலம் தாழ்த்தி வெளியிடப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.
 • 144
Added a news 
நாட்டில் இன்று இரண்டாயிரத்து 284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 922ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 917 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 464பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 203ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், 33ஆயிரத்து 255 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 22இலட்சத்து 85 ஆயிரத்து 572 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை ஐந்து இலட்சத்து 44ஆயிரத்து 898 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
 • 146
Added a news 
கனடாவில் கொரோனா பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 122பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து இரண்டாயிரத்து 128பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 931பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 16ஆயிரத்து 957பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 725பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 13இலட்சத்து 59ஆயிரத்து 240பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 • 145