Ads
சனிப் பெயர்ச்சி 2020
சனிப் பெயர்ச்சி 2020: உங்கள் ராசிக்கு நடக்கப்போகும் மாற்றங்கள்
Empty
Added article
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி சம்பந்தமான காட்சிகள் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சென்னை திருமயிலை பகுதியில் பிலிம் சிட்டி ஒன்றை கட்டப் போகும் நிலையில், அதற்காக அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதை அடுத்து, இந்த பணிகளை அவ்வப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.கட்டிடம் கட்டுவதற்கான தலைமை ஆலோசகராக கமல்ஹாசனை தமிழக அரசு நியமிக்க இருப்பதாகவும், அதற்காகத்தான் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அடிக்கடி கமல்ஹாசனை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் போல இந்த ஃபிலிம் சிட்டியை கட்ட இருப்பதால், கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்குள்ள கட்டிட மாடல்களை பார்த்து, அவருடைய ஆலோசனைப்படி இந்த கட்டடம் கட்ட வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.எனவே, விரைவில் கமல்ஹாசன் தமிழக அரசின் சார்பில் அரசு செலவில் அமெரிக்கா சென்று புதிய பிலிம்சிட்டி கட்டிடத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 55
Added a news
கனடாவிலுள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.கனடாவின் வன்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை கோவில் மீது நேற்று (20) காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், மற்றுமொரு இந்து கோவிலான லட்சுமி நாராயணன் கோவிலையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கோவிலின் சுவர்களை சேதப்படுத்தியுள்ளதோடு அச் சுவர்களில் மையில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர்.
- 59
Added a news
போப் பிரான்சிஸை பொருத்தவரை அவருக்கு அந்தப் பதவிக்கென சம்பளம் இருக்கிறது. மாதம்தோறும் 32,000 அமெரிக்க டாலர் சம்பளமாக பெற தகுதி பெற்றவர்.ஆனால் போப் பிரான்சிஸ் எனக்கு சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அவருக்கு வந்த சம்பளத்தை தேவாலயங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்க செய்தார்.இதற்கு முன்பு இருந்த எந்த போப்பும் செய்யாத ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. இவர் போப்பாக பதவியேற்பதற்கு முன்பாகவே கார்டினல் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். அப்போது கூட தனக்கு வழங்கப்பட்ட சம்பளங்களை வேண்டாம் என மறுத்துள்ளார்.
- 61
Added a news
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) காலமானார். அவருக்கு வயது 88. Pope Francis no moreஇதுதொடர்பாக, வாடிகன் கார்டினல் கெவின் ஃபாரெல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அன்புள்ள சகோதர சகோதரிகளே, நமது புனித தந்தை போப் பிரான்சிஸ் மறைவை நான் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறேன். இன்று காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ், தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்” என்று தெரிவித்துள்ளார்.அர்ஜெண்டினாவில் பிறந்த போப் பிரான்சிஸ், கடந்த 2013-ஆம் ஆண்டு தனது 76 வயதில் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 12 ஆண்டுகள் போப்பாக இருந்தார்.கடந்த சில மாதத்திற்கு முன்பாக அவர் நிம்மோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் தான் காய்ச்சலில் இருந்து குணமடைந்த நிலையில், ஈஸ்டர் மறுநாளான இன்று அவர் மறைந்திருப்பது உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களை சோகத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.தனது இறுதிச்சடங்கை எளிய முறையில் நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு போப் வேண்டுகோள் விடுத்தார். அதாவது… புதிய இறுதிச்சடங்கின்படி போப் உடல் துத்தநாகத்தால் மூடப்பட்ட சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்படும். இதற்கு முன்பாக மூன்று சவப்பெட்டிகளுடன் போப் உடல் அடக்கம் செய்யப்பட்டது
- 80
Added a post
ஒரு ஏலக்காய் மட்டும் போதும்! உங்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு....சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும் மருத்துவ மூலிகையில் ஒன்று ஏலக்காய். ஏலக்காய் வாசனை பொருட்கள் மட்டுமல்லாமல் . ஏலக்காயில் புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து ,பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம் ,வைட்டமின் ஏ, பி, சி , போன்றவைகள் உள்ளது.ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர என்ன பயன் என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட ஜீரணக் கோளாறு குணமாகும் பசியின்மை நீங்கும். உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.வயிற்று வலி வயிறு உப்புசம் போன்றவைகள். நீங்கும்.அதன் பிறகு மூச்சு விடுவதில் சிரமம், தொடர்ந்து இருமல் வருதல், நெஞ்சு சளி போன்றவைகள் நீங்கும். அதனை அடுத்து ஏலக்காய் மென்று சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும்.உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். பிறகு ஒரு சிலர் பயணம் செய்யும் பொழுது வாந்தி மயக்கம் போன்றவைகளால் அவதிப்படுவார்கள் அதனை முற்றிலும் தடுப்பதற்கு ஏலக்காயை மென்று சாப்பிட வேண்டும்.
- 79
Added a post
ஒரு அதிகாலைப் பொழுது.... கணவன் மனைவியை எழுப்பி கேட்டான். "டியர்... யோகா பண்ணப் போறேன்... நீயும் வர்றியா?"கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி , "ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்.. உடம்பை குறைன்னு சொல்றீங்க.. அப்படி தானே?"கணவன்: "அதுக்கில்லைம்மா.. யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது".மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"கணவன்: "இல்லை இல்லை.. நீ வரவேணாம். விடு".மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க"கணவன்: "ஐயோ இல்லை.. ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"மனைவி: அப்படிதான் சொன்னீங்க.. அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"கணவன்: "தயவு செஞ்சு விடு.. காலங்காத்தால ஏன் சண்டை?"மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்".கணவன்: "Ok.. நானும் போகலை. போதுமா?"மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு.. அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”கணவன்: "சரி, நீ தூங்கு.. நான் தனியா போய்க்கிறேன்.. சந்தோஷமா?"மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்.. அதுக்கு தானே இவ்வளவும் பேசுனீங்க?"வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை.. டயர்டாகி யோகாவுக்கு போகாமல் படுத்துவிட்டான்..
- 83
Added a news
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளது. சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார். இந்தநிலையில், இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறைச் சேவையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.000
- 109
Added a news
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் "வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றையதினம் நடைபெற்றது .உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி மற்றும் நடைபவனி மேற்கொள்வதற்கு தடை விதித்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் .இதன்போது ஏற்பாட்டாளர்கள் இது தேர்தல் சார்ந்த நடைபவனி அல்ல என பொலிஸாருக்கு தெளிவுபடுத்திய நிலையில் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்கள் நடைபவனியில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனையுடன் இவ் நடைபவனி இடம்பெற்றது.000
- 124
Added a news
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) ஆரம்பமானதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, முதல் பருவம் மே 9ஆம் திகதி முதலாம் தவணை முடிவடைய உள்ளது.2025ஆம் ஆண்டின் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் மே 14 ஆம் திகதி திங்கள் கிழமை மீண்டும் தொடங்கி ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை தொடரும்.மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை தொடரும்.அத்துடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.00
- 110
Added a news
வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அதற்கானதாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற (21.04.2015) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் 6 ஆம் திகதி தேர்தலும் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.இதேநேரம் உள்ளூராட்சி என்பது உள்ளூருக்கான அதிகாரங்களை கொண்டது. அது அபிவிருத்தியையும் வலுவான சமூகக் கட்டமைப்பின் பின்னணியையும் கொண்டது.ஒவ்வொரு உள்ளூராட்சியும் அந்தந்த பிரதேசங்களைக் கொண்ட பிரதிநிதிகளை குதிப்பாக தமிழர் பூர்வீக கட்சிகளை கொண்ட பிரதினிதிகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.இந்நேரம் தமிழரசுக் கட்சி இம்முறை வடக்கு கிழக்கில் 58 சபைகளைல் போட்டியிடுகின்றது. இந்த சபைகளுக்கு நாம் சிறப்பான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.இந்நேரம் ஊழல் இல்லாத சபைகளுக்கே நிதி என ஜனாதிபதி கூறுவதை ஏற்க முடியாது.கடந்த காலத்தில் வடக்கு மாகாண சபைக்கு அனுப்பப்பட நிதியில் எந்த நிதி திருப்பி அனுப்பப்படது என்பதை எவரவது நிரூபியுங்கள். இதை நான். திருப்பி அனுப்பப்பட்டது என கூறும் தரப்பினருக்கு சாவாலாகவும் விடுகின்றேன்.தேசிய மக்கள் சக்தியும் இம்முறை வடக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் போடியிடுகின்றது.ஆனால் எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக, சுதந்திரமாக செயற்பட முடியாதிருக்கின்றார்களோ அதே போன்றவர்களாகவே இவர்களும் தென்னிலங்கையில் நிகழ்ச்சி நிரலை நிறைவுசெய்யும் ஏவுகருவிகளாகவே இருப்பர்.குதிப்பாக சுயாதீனமாக செயற்பட குறித்த ஜேவிபி கட்சியின் கொள்கை நிலைப்பாடும் இடங்கொடுக்காது.இந்நேரம் கடந்த தேர்தல்களில் சொன்னது எதனையும் இதுவரை செய்யாதவர்கள் இனி செய்வார்களா?இந்நேரம் அனுர தரப்பு அரச ஆதரவு சக்திகள் சுயேச்சையாகவும் நேரடியாகவும் எமது மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து குறிப்பாகடக்ளஸ் தேவனந்தா மற்றும் அங்கையனின் வாக்குகளை அபகரித்தே வெற்றி பெற்றுள்ளனர்அந்தவகையில் சிங்கள மேலாதிக்கம் இனி வடக்கில் எடுபடக்கூடாது. அதற்கு மக்கள் தெளிவுடன் செயற்படுவது அவசியம்மேலும் அரசியல் கைதிகள் விடுதலை என கூறுவது ஒவ்வொரு தேர்தல் கால பேசுபொருளே தவிர அது உண்மையான பேச்சுக்கள் அல்ல.அனுர நினைத்திருந்தால் தண்டனை பெறும் தமிழ் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவித்திருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை?அனுர அரசு தாம் ஒரு மாற்றத்துக்கானவர்களாக இருந்தால் இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்கட்டாக விடுவிப்பை செய்திருக்கலாலாம்.அதை செய்ய இவர்கள் விரும்பமாட்டார்கள்.இவர்களே இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் மிகவும் இனவாதத்துடன் பயணிப்பவர்கள்.இதேநேரம் ஊழல் மோசடியை இல்லாதொழிப்போம் என்று கூறும் இவர்கள் இன்று ஊழலையும் மோசடியையும் கடத்தல்களையும் செய்கின்றனர்.இந்நேரம் எமது முதலமைச்சர் ஊழல் செய்யவில்லை. ஆனால் வினைத்திறனற்றவர் என்பது உண்மைதான் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
- 144
Added a news
அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதை சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாருக்கு எதிராகவேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல எனவும் தெரிவித்தார்.கொழும்பில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு தலமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்ட செயலாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில்,உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நாடெங்கிலும் ஓரே நாளில் நடத்தப்படாமல், சிலவற்றுக்கான தேர்தல் திகதி ஒத்திவைக்கப்படுமாயின், முதலில் நடைபெறுகின்ற பிரதேசங்களின் தேர்தல் முடிவுகள், பின்னர் நடத்தப்படும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தினை செலுத்தும் எனத் தெரிவித்துடன், குறித்த விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். - 21.04.202500
- 146
Added a post
மகான் ஸ்ரீ படே சாயுப் சித்தர் ஜீவ சமாதியானது, இந்தியாவில் - தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னபாபுசமுத்திரம் என்னும் கிராமத்தில் உள்ளது. இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். இவர் மதங்களை கடந்து அருள் செயல் புரிபவர் ஆவார். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை "படே சாயபு" என்று அழைத்தனர்.மகான் வீணையுடன் மரத்தின் அடியில் அமர்ந்தவாறு இருக்கும் சிலைமகான் அவர்கள் தன்வந்திரி லோக தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். அருகில் ஒரு மண் கலயமும், சிறு பானை மற்றும் கொட்டாங்குச்சிகளும் இருக்கும். அதில் சில பச்சிலைகளும், புனித நீரும் இருக்கும். தம்மை நாடி வருபவரின் குறைகளை செவிமடுத்துக் கேட்பார். சிலரை அருகே உள்ள மகிழ மரத்தைச் சுற்றி வரும் படி சாடையாகக் கூறுவார். அவ்வாறு அவர்கள் சுற்றி வந்ததும் அவர்களின் கண்களையே உற்றுப் பார்ப்பார். சிலர் அந்த கருணை விழிகளின் தீட்சண்யம் தாங்காது மயங்கி விழுவர். சிறிது நேரத்தில் விழித்து எழுந்ததும் தமது நோய் முற்றிலுமாக நீங்கி இருப்பதை அறிந்து மகானை வணங்கி மகிழ்வர். சிலர் மகானை வணங்கி விபூதிப் பிரசாதம் பெற்று அணிந்ததுமே தமது நோய் நீங்கியதை அறிந்து மகானைத் தொழுவர் மற்றும் சிலருக்கு மகான் தன் கையால் ஒரு சிறு கொட்டாங்குச்சியில் நீரை அளிப்பார். அதை அருந்தியதுமே அவர்களைப் பீடித்திருந்த நோய்கள் விலகி விடும். குறைகள் அகன்று விடும், சிலருக்கு தமது கைகளால் தீண்டி ஆசிர்வதிப்பார். சிலருக்கு தாம் இமயமலைக் காடுகளில் சுற்றித் திரிந்த போது கண்டறிந்த பச்சிலைகளை அளித்து நோய் தீர்ப்பார். இவ்வாறு பலதரப்பட்ட மக்களின் நோயினை நீக்கும் ஒரு மகாபுரசராக மகான் சிவஸ்ரீ படே சாகிப் விளங்கி வந்தார்.படே சாகிப் எங்கே, எப்போது பிறந்தார்? அவருடைய அவதார தினம் எது போன்ற தகவல்கள் தெரியவில்லை, என்றாலும், அவர் ஜீவ சமாதி ஆனது கி.பி. 1868-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி என்கிற குறிப்பு இருக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆகும். ஆயில்ய நட்சத்திரம் எனவே, இவரது ஜீவ சமாதியில் பிரதி செவ்வாய்க்கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் வழிபாடு சிறப்பாக இருக்கும். ஜீவ சமாதி எண்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மகானின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது, சமாதியின் முன்பு அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. காற்றிலும் மழையிலும் கூட அணைவதே இல்லை. மக்கள் சுற்றி வருவதற்கு விசாலமான இடம் உள்ளது. நிழல் தரும் மரங்கள் உண்டு. அவரின் மறைவுக்குப் பின் மகானின் மகத்துவத்தை உணர்ந்த மக்கள் சமாதிக்குத் தினமும் சென்று வருகிறார்கள்.மக்கள் தங்கள் குறைகளைச் சமாதியின் முன் நின்று மனம் விட்டுச் சொல்லுகிறார்கள். கொடிய தொற்று மற்றும் தீராத நோய்களால் அவதியுறுவோர் படேசாகிப் ஜீவ சமாதியை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்து, இயன்ற அளவு அன்னதானம், நீர் மோர், பிஸ்கெட், பழ வகைகளை தானம் செய்தால் உத்தமமான பலன்களைப் பெறலாம். தாமரை இலையின் பின்பக்கம் அன்னம் வைத்து தானம் செய்வது கூடுதலான பலனைத் தரும். மகானின் அருளாசி வேண்டி பக்தர்கள் திரளாக கலந்துக் கொள்வார்கள். மேலும் வழிபாடுகளும் சிறப்பாக இருக்கும்.மகான் ஸ்ரீ படேசாயுபு சுவாமி ஆலயத்தின் நுழைவு வாயில்விழுப்புரம் - பாண்டிச்சேரி மெயின் ரோட்டில் (வில்லியனூர் வழி) உள்ளது கண்டமங்கலம் ஊராட்சி. கண்டமங்கலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு சுமார் 22 கி.மீ, பாண்டிச்சேரிக்கும் சுமார் 18 கி.மீ தொலைவு ஆகும். இந்தப் பேருந்து தடத்தில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் இறங்கிக் சுமார் 2 கி. மீ. தொலைவில் சின்னபாபுசமுத்திரம் என்கிற ஊரில் உள்ளது. இங்கு தான் ஸ்ரீபடே சாகிப்பின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.
- 180
Added a post
ஒரு பறவை ஒரு கிளையில் அமர்ந்து இருக்கும்போது, அதன் கணுக்கால் வளைந்து, இந்த தசைநார்கள் நீட்டப்படுகின்றன. இந்த தன்னிச்சையான பிரதிபலிப்பு தூங்கும் பறவையை கிளையிலிருந்து விழாமல் வைத்திருக்கிறது. கால்கள் நேராக்கும் வரை தசைநார்கள் இறுக்கமாக இருக்கும். பறவை எழுந்து நிற்கும்போது, அதன் கால்கள் நிமிர்ந்து, தசைநாண்கள் தளர்ந்து, கால் விரல்களைத் திறந்து கால்களை விடுவிக்கின்றன.
- 191
Added a post
துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்.இளைஞன் ஒருவன் வந்தான் "சாமி எனக்கு ஒரு சந்தேகம். உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்?" என்று கேட்டான்.துறவி அவனிடம் சொன்னார் "தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய். ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு" என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார். அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான். இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன. அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் கிட்டே வந்தார் துறவி. "இன்று சுத்தப்படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்?" என்று கேட்டார்.அதற்கு அவன், "என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்கிறீங்க?திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா.?" இதை கேட்ட துறவி அப்போது சொன்னார் "தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில். நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் , அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் , மனிதர்களை நல்வழி படுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்".இளைஞன் கேட்டான் ”சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன?"அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார், பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா.?""ஆகாது சாமி" என்றான்துறவி கூறினார் ”உன் கேள்விக்கு இதுதான் பதில். நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இப்பொழுது நான் செய்த வேலையைப் போல் என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும், அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை" என்றார்.
- 212
Added a post
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சமூகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபாரத்தின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். தாமதம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் ரிஷபம்வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். துணைவர்வழி உடன்பிறப்புகளால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். முயற்சியில் இருந்துவந்த தடைகள் விலகும். வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். மனதளவில் இருந்துவந்த வருத்தம் நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மிதுனம்மற்றவர்களால் சில பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு பணியையும் மற்றவர்களை சார்ந்திராமல் செய்து முடிப்பது நல்லது. முன் பின் தெரியாதவர்களிடம் கவனமாக இருக்கவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வாகனப் பயணங்களின்போது நிதானம் வேண்டும். மறதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கடகம்மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணம் மூலம் அனுபவம் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை சிம்மம்பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் சில உதவிகள் மூலம் குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா கன்னிநண்பர்களின் ஆலோசனைகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு உயரும். வரவுகள் தேவைக்கு தகுந்த விதத்தில் இருக்கும். உடன்பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் துலாம்செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனம் சார்ந்த பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு விருச்சிகம்குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகை ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : நீலம் தனுசுஎதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் அணுகூலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இணையம் சார்ந்த வர்த்தகத்தில் கவனம் வேண்டும். மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். வீட்டுத் தேவைகள் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் மகரம்பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை கும்பம்மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். போட்டி தேர்வுகளில் விவேகத்துடன் செயல்படவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைப்பட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கோபம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மீனம்திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிறஇன மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். பாராட்டு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- 276
Added a post
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி திங்கட்கிழமை 21.4.2025.திதி : இன்று பிற்பகல் 02.23 வரை அஷ்டமி. பின்னர் நவமி.நட்சத்திரம் : இன்று காலை 08.34 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.நாமயோகம் : இன்று மாலை 06.51வரை சாத்தியம். பின்னர் சுபம்.கரணம் : இன்று அதிகாலை 02.48 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.23 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.அமிர்தாதியோகம்: இன்று காலை 06.00 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 08.34 வரை மரண யோகம். பிறகு அமிர்த யோகம்.நல்ல நேரம்காலை : 06.30 முதல் 07.30 மணி வரைகாலை : 09.30 முதல் 10.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- 231
Added a news
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் 2025 ஆம் ஆண்டு வைசாகி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கல்சா நாள் ஊர்வலத்தில் 5,50,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகின் மிகப்பெரிய சீக்கிய சமூகத்தினரின் வைசாகி விழாவாக இது மீண்டும் மாறியுள்ளது. சர்ரே நகரின் 128-வது வீதியில் அமைந்த குருத்வாரா டாஷ்மேஷ் தர்பார் கோவிலில் இருந்து ஆரம்பித்த ஊர்வலத்தில், இருபதிற்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பங்கேற்றன."இன்றைய நிகழ்வில் நாம் கண்டது, ஒற்றுமை, பல்வகை தன்மை மற்றும் பொது மகிழ்ச்சி ஆகியவற்றின் அழகான வெளிப்பாடு" என்று ஊர்வல பேச்சாளர் மோனிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்."சர்ரே நகர் கீர்த்தன் என்பது, சீக்கிய சமுகத்தின் வரலாறு, பழக்கவழக்கங்கள், மனித உரிமைகளுக்கான உறுதி மற்றும் அரசியல் சுயாதீனத்திற்கான நம்பிக்கையை பகிரும் வாய்ப்பாகும்.இந்த நிகழ்வு, சர்ரே மற்றும் கனடாவில் வாழும் அனைத்து மக்களுடனும் உறவுகளை இணைக்கும் நிகழ்வாகவும் உருவாகி வருகிறது.இந்த பாரம்பரியம் தொடர்ந்து வளரும் விதமாக காண்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.வைசாகி, 1699ஆம் ஆண்டு கல்சாவின் உருவாக்கத்தையும், பஞ்சாபில் விவசாயிகளின் விளைச்சலையும் நினைவுபடுத்தும் வகையில் இந்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
- 390
Added a post
அப்பா..அம்மா ஊர்ல இருந்து வராங்க..இந்த மாசம் கொஞ்சம் பட்ஜெட் எல்லாம் சேர்த்துப்போட்டு கூட வாங்கிக்கணும்..வேணாம்..அவங்க வரட்டும்.. அப்புறம் வாங்கிக்கலாம்..வந்தார்கள்..ஒரு ரெண்டு மாசம்போல இருந்துவிட்டுப்போனார்கள்..இவர்கள் வழக்கம்போல மாச செலவு பட்ஜட் போட உட்கார்ந்தார்கள்..வழக்கத்தை விடவும் எந்த செலவுமே கூடியிருக்கவில்லை..EB..பில் குறைந்திருந்தது..மளிகை..பால்..காய்கறி எல்லாமே இவர்கள் இருவருக்காவதைவிட நால்வருக்கும் சேர்த்து குறைவாகவே ஆகியிருந்தது..சாயங்காலம் வழக்கமாகப்போகும் ஓட்டலுக்குப் போனார்கள்..வாங்க சார் எங்க ரெண்டுமாசமா ஆளையே காணல..இருவருக்குமே பொட்டிலடித்தது.. உண்மைதான்..அம்மா..அப்பா இருந்த ரெண்டுமாசமும் அம்மா பாத்துப்பாத்து எல்லாருக்கும் பிடிச்சமாதிரி..சமைத்துக்கொடுத்தாள். எதையும் அளவோடு செய்ததால் எல்லாம் சாப்பிட்டபிறகும் எதுவும் மீந்துபோய் தொட்டியில் கொட்டவில்லை..அப்பா பார்த்துப்பார்த்து ஆளில்லாத இடத்தில் லைட்டையும் பேனையும் டிவியையும் அணைத்துக்கொண்டே இருந்தார்..பழங்கதை எங்களோடு பேச குழந்தை உடன் கொஞ்சி விளையாட என்று அவர்கள் இருந்ததில் பொழுதை கழிக்க சினிமா பூங்கா மால் போன்ற விசயங்கள் தேவைப்படாமல் போனதில் பெரிய தொகை சேமிப்பு ஆனதுதக்காளி 140ஐத்தொட்டபோது எலுமிச்சை ரசம் சாப்பிட்டார்கள்..காய்கறிகளை அளவோடு தேவைக்கு அப்பா வாங்கியதில் அழுகல் வேஸ்ட் தவிர்க்கப்பட்டதுகுழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர அலுவலகத்தில் இருந்து பைக்கில் வந்து போகும் வேலை இல்லாமல் பெட்ரோல் மற்றும் நேரம் இரண்டும் மிச்சமானதுகூட்டிக்கழித்து பார்க்க கணக்கு சரியாக தான் வந்தது.. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எப்போதுமே வரம். அவர்களின் அனுபவங்கள் நமக்கு பாடங்கள்.
- 402
Added a post
சிவாஜி மராட்டியத்தை ஒளரங்கசீப்பிடமிருந்து கைபற்ற முயற்சி செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவரின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியாகவே முடிந்தது.அப்படி ஒருமுறை தோல்வியடைந்தபோது சிவாஜி காட்டின் வழியே தனிமையில் மிகவும் சோர்வாகச் சென்றார். அப்போது அவருக்கு மிகவும் பசித்தது. ஆனாலும் தனது பயணத்தை அக்காட்டுப் பகுதியில் தொடர்ந்தார்.அங்கு அவருக்கு ஒரு குடிசைப்பகுதி தென்பட்டது. பசி மற்றும் போர் தோல்வியால் மிகவும் களைப்புற்று இருந்த சிவாஜி குடிசையின் வாயிலைத் தட்டினார்.குடிசையினுள் இருந்து மூதாட்டி ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் சிவாஜி “அம்மா பயணக் களைப்பால் மிகவும் பசியாக உள்ளேன். தாங்கள் எனக்கு உண்பதற்கு ஏதாவது தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்” என்றார்.அதற்கு மூதாட்டியும் “மகனே உண்ண சூடான களியைத் தருகிறேன். அதனை உண்டு உன் பசியை நீக்கு” என்றார்.சிவாஜியும் “மிக்க நன்றி தாயே. அவ்வாறே செய்யுங்கள்” என்று கூறினார்.மூதாட்டியும் ஒரு தட்டில் சூடான களியை எடுத்து வந்து சிவாஜியிடம் கொடுத்தார். களியை வாங்கிய சிவாஜி களியின் மையப்பகுதியை எடுத்து உண்ண முயற்சி செய்தார். மிகவும் சூடாக இருந்ததால் அவரால் களியை கைகளில் எடுக்க முடியவில்லை.அதனைக் கண்ட மூதாட்டி “நீ சிவாஜியைப் போல் அவசரப்படுகிறாய்” என்றார்.அதற்கு சிவாஜி மூதாட்டியிடம் “சிவாஜியைப் போல் அவசரப்படுகிறேனா?. எனக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று விளக்கமாக் கூறுங்கள்” என்றார்.அதற்கு மூதாட்டி “தட்டில் உள்ள சூடான களியின் ஓரங்களை முதலில் உண்டு விட்டு மையத்திற்கு சென்றால் களியின் சூடு குறைந்து உண்ண முடியும்” என்று கூறினார்.“அதேபோல் சிவாஜி முதலில் எல்லையில் உள்ள கிராமங்களை கைபற்றி தன்னைப் பலப்படுத்திக் கொண்டு பின் கோட்டைகளை முற்றுகையிட வேண்டும்.” என்றார்.இதனைக் கேட்ட சிவாஜி மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கி “வெற்றி பெற வீரம் மட்டும் இருந்தால் போதாது. விவேகத்துடன் கூடிய மதிநுட்பம் வேண்டும் என்று நல்ல வழியைக் காட்டினீர்கள். நான்தான் நீங்கள் கூறும் சிவாஜி. என்னை ஆசீர்வதியுங்கள்” என்றார்.பின் மூதாட்டி கூறியபடி சூடான களியினை உண்டதுடன் முதலில் எல்லையில் இருந்த கிராமங்களைக் கைபற்றி தன்னைப் பலப்படுத்திக் கொண்டு கோட்டைகளைப் பிடித்து மராட்டிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.இக்கதையிலிருந்து நாம் எந்த ஒரு பிரச்சினையையும் அணுகும்போதும் முதலில் பிரச்சினையின் தன்மையை ஆராய்ந்து அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத் திட்டமிட்டு பின் வெற்றி பெற செயல்பட வேண்டும்.
- 398