புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும் கொண்டாட்டமாக மாற்றி விட முடியுமென்பதற்கு ஷிகான் ஹூசைனிதான் உதாரணம். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹூசைனி தரமணியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்தார்.
மருத்துவமனையிலுள்ள அவரின் அறையில் நோயாளிக்குரிய அடையாளங்கள் குறைவாகவே காணப்பட்டது. அந்த அறையில் விரக்திக்கே இடம் இல்லை. தினமும் மாணவர்களுடன் சந்திப்பு தன்னை தேடி வருபவர்களுடன் உரையாடல் , இடை இடையே கிட்டார் வாசிப்பு, நண்பர்களை கிட்டார் வாசிக்க சொல்லி கேட்பது என்று மரணத்தையும் ஜாலியாகவே எதிர்கொண்டு எமனிடத்தில் போய் சேர்ந்து விட்டார் மாஸ்டர்.
துரையை பூர்வீகமாக கொண்ட ஷிஹான் ஹுசைனி இயக்குநர் கே.பாலசந்தர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். புன்னகை மன்னன் படத்தில் இலங்கை தமிழராக சிறிய வில்லன் வேடத்தில் ஹூசைனி நடித்திருந்தார். அதை தொடர்ந்து, வேலைக்காரன், மூங்கில் கோட்டை என பல படங்களில் நடித்திருந்தார். விஜய்யின் பத்ரி படத்தில் அவருக்கு உடற்பயிற்சியாளராகவும் நடித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்துடன் ப்ளட்ஸ்டோன் என்கிற ஆங்கில படத்தில் பணியாற்றியிருக்கிறார்.who is karate Shihan Hussaini?
ஆனால்,கராத்தேயும் வில்வித்தையும்தான் ஹூசைனிக்கு உயிர். வில்வித்தைக்கு தமிழகத்தில் உலகத் தரத்திலான பயிற்சி மையம் அமைக்க வேண்டுமென்பதுதான் அவரின் வாழ்க்கையின் ஒரே லட்சியம். ஆனால், கடைசி வரை அது கைகூடவில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஷிகான் ஹுசைனி, தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தார். நள்ளிரவு 1.45 மணியளவில் ஷிகான் ஹுசைனி உயிரிழந்தார். தற்போது, அவரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவித்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஷிஹான் ஹுசைனி இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கலா மாஸ்டர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- 725