இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறை தகவல்களை வாஷிங்டன் போஸ்ட்டுக்கு கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டுவதற்கு முன்பே இந்த தகவல் கசிந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஆலோசகர் நதாலி ட்ரூயின் மற்றும் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் ஆகியோரால் இந்த தகவல் கசியவிடப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன்படி, நாடாளுமன்ற குழு விவாதத்தின் போது, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டங்களில் இந்திய அதிகாரி ஒருவர் ஈடுபட்டதாக நதாலி ட்ரூயின் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய ட்ரூயின், இதுபோன்ற தகவல்களை கசியவிட பிரதமரின் அனுமதி தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வாஷிங்டன் போஸ்ட்டுடன் ரகசிய உளவுத்துறை தகவல்கள் எதுவும் பகிரப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த தகவல்களை கசியவிடுவதற்கான முடிவு, இந்தியாவுடன் தீவிரமடைந்து வரும் வெளிநாட்டு தலையிடல் சர்ச்சையில் கனடாவின் நிலைப்பாட்டை அமெரிக்க பத்திரிக்கை அறிக்கை செய்வதை உறுதிப்படுத்த வகுத்த வியூகத்தின் ஒரு பகுதியாகும் என்று ட்ரூயின் கூறினார்.
"எங்கள் நடவடிக்கைகள் பற்றிய வகைப்படுத்தப்படாத தகவல்களையும், உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல்கள் உட்பட, கனேடியர்களை குறிவைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் இந்திய அரசாங்கத்தை இணைக்கும் ஆதாரங்களையும் நாங்கள் வழங்கினோம்," என்று ட்ரூயின் சாட்சியமளித்தார்,
- 1180