*கணவன் மனைவிக்குள் பிரிவே வரக்கூடாது என்றால், ஞாயிற்றுக்கிழமை இந்த 1 பொருளை வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஆயுள் முழுவதும் உங்களுக்குள் பிரிவே வராது.*
இன்றைய காலகட்டத்தில் கல்யாண வாழ்க்கையும், கணவரோடு வாழும் வாழ்க்கையும் ஒரு சிலருக்கு நரகமாக இருக்கிறது. வாழ்க்கை என்றாலே சந்தோஷமாக வாழத்தான். இந்த வாழ்வு ஒருமுறைதான். 24 மணி நேரத்தில் பாதி நேரம் தூக்கத்திலேயே கழிகின்றது. மீதி இருக்கும் நேரத்தில் வேலை செய்ய முக்கால்வாசி நேரம் கழிகிறது. மீதி இருக்கும் நேரத்திலாவது நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வேண்டாமா.
உங்களுடைய வீட்டில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் முகத்தைக் கூட பார்த்துக் கொள்ள பிடிக்காமல் இருந்தால், இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் உங்களுக்காகத்தான். இதோடு சேர்த்து பெண்கள் தங்கள் மாங்கல்ய விஷயத்தில் செய்யக்கூடாத ஆன்மீகம் சார்ந்த சின்ன சின்ன தவறுகளை பற்றியும் பார்த்து விடுவோம்.
கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம்
கணவன் மனைவி ஒற்றுமை என்றால் முதலில் இருக்கக் கூடிய விஷயம் திருமாங்கல்யம். தாலி கட்டிய பிறகுதான் இந்த உறவு தொடங்குகிறது. இந்த தாலி கயிறு மாற்றும் போது பெண்கள் செய்யக்கூடிய ஒரு முக்கியமான தவறு இருக்கிறது. இந்த தவறை நீங்கள் இதுவரை செய்திருந்தால் இனிமேல் செய்யாதீங்க திருத்திக் கொள்ளுங்கள்.
தாலி கயிறு மாற்றும் போது முதலில், கழுத்தில் மாங்கல்யத்தை போட்டுக்கொண்டே கத்தரிக்கோலை வைத்து அந்த கயிறை வெட்டவே கூடாது. கழுத்தில் இருக்கும் மாங்கல்ய கயிறு கழுத்தில் இருந்தபடியே வெட்டப்பட்டால், உங்களுக்கு மாங்கல்ய தோஷம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
புதுக்கயிறு கழுத்தில் மாட்டிக் கொண்டு, பழைய கயிறையோ, சரதையோ கழுத்திலிருந்து கழட்டி அதில் இருக்கும் கயிறை வெட்டி புது கயிறு கோர்த்து மீண்டும் உங்களுடைய கழுத்தில் மாட்டிக்கொள்ள வேண்டும். கூடுமானவரை மாங்கல்ய கயிறு மாற்றும் போது உங்கள் கணவர் உடன் இருக்கும்போது மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களது கணவரது கையால் மீண்டும் அந்த தாலி கயிறை உங்கள் கழுத்தில் போட்டுக் கொள்வது சிறந்தது. தாலி கயிறு மாற்றும் போது ராகு காலம் எமகண்டம் நேரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் காலை 6:00 மணிக்கு முன்பாகவே சூரிய உதயத்திற்கு முன்பு தாலி கயிறு பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.
சரிங்க கணவன் மனைவிக்குள் பிரிவு வரக்கூடாது என்றால் ஞாயிற்றுக்கிழமை என்ன பொருளை வாங்கணும். மல்லிகை பூ தான். இரவு 8 மணிக்கு முன்பாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் ஞாயிற்றுக்கிழமை மல்லிகை பூ வாங்கி மனைவிக்கு, கணவன் கொடுக்க வேண்டும். மல்லிகைப்பூ என்பது சுக்கிரன். அங்கு மகாலட்சுமியின் மனம் மகிழ இந்த மல்லிகைப் பூவின் வாசம் நமக்கு உதவி செய்கிறது. நம் வீட்டு மகாலட்சுமி நம்முடைய மனைவிதான்.
அவளுடைய மனதை குளிர வைப்பதற்கு 50 ரூபாய்க்கு வாங்கும் மல்லிகை பூ போதுமானது. இதில் சுக்கிர வசியமும் அடங்கி இருக்கிறது. இதை எந்த தவறான நோக்கத்துடனும் சொல்லவில்லை. கணவன், மனைவிக்கு மல்லிகை பூ வாங்கி கொடுக்க வேண்டும், மனைவி கணவருக்கு எது விருப்பமோ அதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கணவருடைய மனம் நோகாமல் மனைவி நடந்து கொள்ள வேண்டும்.
நீ இல்லை என்றால் நானும் இல்லை என்ற முடிவுக்கு இருவரும் வரவேண்டும். அடிமையாக இருக்கச் சொல்லவில்லை எல்லாம் என் கணவர் தான் என்று மனைவி இருந்தால், கணவர் எல்லாம் என் மனைவி தான் என்று இருக்க தொடங்கி விடுவார். குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்றால் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரம் ஒன்றே போதும். யார் குடும்பத்திலும் விவாகரத்து என்ற வார்த்தை வரவே வராது நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம்.
- 2093