Feed Item
Added a poem 

கருவில் சுமந்தாள் அன்னை

கருவிழியில் சுமக்கிறாய் நீயடி 

என் உணர்வுகளுக்கு 

உருவம் கொடுப்பவள் நீயடி 

அன்பு ஊற்றெடுக்கும்

அருவி நீயடி

அதில் விழுந்து நீச்சலடிக்கும் 

ஆசை தங்கை நானடி.

என் கனவுகளை

கவலைகளை மொழிபெயர்ப்பவளே

தொப்புள்க்கொடி தோழியடி நீ

துயரத்திலும்

தோள் கொடுப்பவள் நீயடி .

அணைக்க கைகள் இருந்தால் 

அழுவதில் கூட சுகம் தான் 

ஆத்மார்த்த அன்பு உனதடி 

அதை உணர்கிறேன் தினமும் நானடி.

அன்றாடம் என் 

அனுபவ பரிமாற்றம் உன்னோடு தானடி 

அதனால் அழுக்குகள் இல்லை

என் மனதில் என்றால் உண்மை தானடி.

அத்திபூத்தாற் போல் 

சில கோபங்களும் 

உண்டாகும் தருணங்களிலேயே 

மண்ணாக்கி விடுவாயடி 

மனம் நொந்து 

மன்னிப்பும் கேட்பாயடி .

புரிந்துணர்வின் 

பொக்கிஷம் நீயடி 

புன்னகைக்க கற்றுக் கொண்டேன் 

உன்னால் நானடி .

எனக்காய் துடிக்கும் 

இதயம் உனதடி 

இன்னொரு தாய் தான்

நீயும் எனக்கடி .

என் விம்பத்தைக் காட்டும்

கண்ணாடி நீயடி 

என் கண்களின் காயமெல்லாம் 

கண்டுபிடிப்பாய் நீயடி.

வாழ விருப்பம் கொண்டேன் 

உன்னால் தானடி 

வலிகள் எல்லாம் 

மறக்க வைத்தவளும் நீயடி .

மறுபிறப்பு ஒன்று

எடுத்து வந்தால் நீ

மகளாய் பிறக்க வேண்டுமடி 

தாயாகி உன்னை 

தாலாட்ட வேண்டும் நானடி. 

சிறந்த வழிகாட்டி நீயடி 

வாழ் நாள்வரை 

சகியடி நீ எனக்கு

சகோதரியே!

  • 864