Feed Item
Added article 

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஷிவானி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார்.  அதோடு விஜய் சேதுபதியின் 46 வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர  ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விஷேசம் படத்தில் நடிக்கிறார்.8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் பம்பர் என்ற புதிய படத்திலும் நடிக்க ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலயைில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம் ஷிவானி. இந்த படத்தில் ஏற்கனவே பிரியா பவானிசங்கர் நடித்து வருகிறார். இன்னொரு நாயகியாக ஷிவானி இணைந்துள்ளார்.

  • 598