Feed Item
Added a news 

வீடு இல்லாதவர்களிற்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட மற்றுமோர் இல்லம் யாழ்ப்பாணத்தில் வழங்கிவைக்கப்பட்டது. குறைந்த வருமானத்தினை பெறுகின்ற குடும்பங்களிற்காக புதிய வீடுகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் இன்னுமோர் அத்தியாயமாக ´தலைக்கு நிழல்´ திட்டத்தின் கீழ் யாழ். அல்வாய் பகுதிய வாழ்கின்ற பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக அமைக்கப்பட்ட புதிய வீடானது உரிமையாளரிடம் கையளிக்கும் நிகழ்வானது இன்று (26) யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா ஆர்.டபிள்யு.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஜே/400, அல்வாய் பிரதேசத்தில் வசிக்கும் அங்கவீனமான பெண்ணான தர்சன் யோகேஸ்வரி அவர்களிற்கு குறித்த இல்லம் அமைப்பதற்கான பூரண நிதியனுசணையினை கொழும்பு றோயல் கல்லூரியின் 1980 ஆம் ஆண்டு (தமிழ்மொழி) மூலமான பழைய மாணவர்கள் அணி வழங்கியிருந்ததுடன் வீட்டின் நிர்மாணப் பணியானது 551 காலாட் படைப்பிரிவின் நெறிப்படுத்தலின் கீழ் 4 ஆவது சிங்கப் படையணியினரின் சரீர உழைப்பில் நடைபெற்றது குறிப்பிடததக்கது.

மேலும் குறித்த வீட்டிற்கு தேவையான சகல அத்தியாவசிய தளபாடங்களும் மற்றும் உலருணவுப் பொதிகளும் யாழ்ப்பாண பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களது மேலதிக கல்விச் செயற்பாட்டிற்காக கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

  • 455