Feed Item
Added a news 

இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கடந்த 1983 ஆம் ஆண்டு மற்றும் 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் தங்கியிருந்த மக்களின் கல்வித் தேவைக்காக உருவாக்கப்பட்ட பாரதிபுரம் வித்தியாலயம் கல்வியில் பல்வேறு படிநிலைகளைத்தாண்டி இன்று அதிக மாணவர்களைக் கொண்ட முன்னனி பாடசாலையாக காணப்படுகின்றது.அத்துடன் குறித்த பாடசாலையில் கணித விஞ்ஞானப் உயர்தரப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு உயர்தரப் பிரிவில் பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்கள் தெரிவாகியுள்ள நிலையில் இதுவரை குறித்த பாடசாலையை தரம் உயர்த்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இந்த பாடசாலை தரம் உயர்த்துவதில் அதிகாரிகள பாரபட்சம் காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.கடந்த ஆண்டுகளில் குறித்த பாடசாலை-ய தரம் உயர்த்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களால் சம்பந்தப்பட்ட கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கல்வி அமைச்சுக்கு கோரிக்கைகள் விடுக்கபட்டு கடிதங்களை அனுப்பி இருந்த நிலையில் பாடசாலையை தரமுயர்த்துவதாக தெரிவித்தபோதும் இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை. ஆனால் மாணவர் எண்ணிக்கை குறைந்த கணித விஞ்ஞான பிரிவுகள் இல்லாத பாடசாலைகள் கூட தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளன.கணித விஞ்ஞானப் பிரிவுகள் கணித விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் இப்பாடசாலை தரம் உயர்த்தப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் இந்த நிலையில் குறித்த பாடசாலையில் தரம் உயர்த்த  நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இன்று (25-01-2022) அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

  • 599