Feed Item
Added a news 

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் நிபந்தனைகளை மீறிய விதத்தில் மணல் கொண்டு சென்றமை என்பவற்றுக்கு  எதிராக 610 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு கோடியே தொண்ணூற்றி  எட்டு இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரும் தமது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக போலீசாரால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர். 2021ஆம் ஆண்டில் இவ்வாறு அனுமதிப்பத்திரங்கள் இன்றியும் அனுமதிப்பத்திரம் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிச்சென்ற வாகனங்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.அந்த அடிப்படையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 610 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு கோடியே 98 லட்சத்து 89 ஆயிரத்து 500 தண்டப்பணம் அறவிட பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் 1005 கியூப் மணல் அரசுடமையாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • 514