Feed Item
Added article 

இந்தியாவின் ‘இசைக்குயில்’ என வர்ணிக்கப்படுபவர் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். இவர் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார்.

மராட்டிய மாநிலம் மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் லதா மங்கேஷ்கருக்கு கடந்த 11-ம் தேதி  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் இன்று சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்கு சிசிச்சை அளித்து வரும் டாக்டர் கூறுகையில், பாடகி லதா மங்கேஷ்கர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் தான் உள்ளார். ஆனால், அவரின் உடல்நிலையில் இன்று சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

  • 324