Feed Item
Added a news 

ஐக்கிய நாடுகள் அவையின் எச்சரிக்கையையும் மீறி, வடகொரியா அணு ஆயுதங்கள் தயாரித்ததால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதன் மீது பொருளாதார தடைகள் விதித்தன. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள (ஜப்பான் கடல் பகுதி அருகே)  ஹாம்யோங் மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியிலிருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சிறிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை . நடத்திய; இன்று மீண்டும் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

  • 823