Feed Item
Added a news 

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பாண் ஒரு ராத்தலின் விலை 60 ரூபாய்யாகவும், பணிஸ் ஒன்று 20 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையில் வடபகுதியில் பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் பல தடவைகள் கோதுமை மாவின் விலை அதிகரித்தது.இதனால் தற்போது மாவின் விலை சடுதியாக அதிகரித்ததன் காரணமாக தற்பொழுது பாணின் விலை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.அந்த வகையில் தற்போது பாண் 75 ரூபாய்க்கும், பணிஸ் 25 ரூபாய் தொடக்கம் 35 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக நுகர்வோர் மிகவும் பாதிக்கப்பட்டு காரணமாக தாம் உற்பத்தி செய்யும் பேக்கரி உற்பத்திவகைகளை வர்த்தக நிலையங்களுக்கு விற்பனைக்காக கொடுத்து மீண்டும் மறுநாள் அதை திரும்பி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக தமது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளதாகவும் சில பேக்கரிகள் தற்பொழுது மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.இதனை கருத்தில் கொண்டு பேக்கரி உற்பத்திக்கு சலுகை விலையில் கோதுமையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

  • 621