Feed Item
Added a news 

இந்தோனேஷியா – ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செமெரு எரிமலை சனிக்கிழமையன்று வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

எரிமலையில் இருந்து பெருமளவு புகை வௌியேறுவதுடன், அருகிலுள்ள கிராமங்களில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.

புகை 15 ஆயிரம் மீட்டருக்கு மேல் நோக்கி பரவக்கூடும் என்பதால், விமான சேவைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செமெரு மலையை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள், சாம்பலும் புகையும் சூழ்ந்துள்ள பகுதியிலிருந்து வௌியேறி வரும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

எரிமலை வெடிப்பினால் குறைந்தது 57 பேர் காயமடைந்துள்ளதாகவும், பலர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடல் மட்டத்தில் இருந்து 3,676 மீட்டர் உயரத்திலுள்ள செமெரு எரிமலை கடந்த ஜனவரி மாதத்திலும் வெடித்துச் சிதறியது.

  • 422