Feed Item
Added a news 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகின் சுவையான உணவுகளை குறித்து பேசுவதற்காக மட்டுமில்லாமல், சாப்பிட வாய்ப்பில்லாத பசி, பட்டினியோடு இருக்கும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது. பல நாடுகளில், குறிப்பாக உலகின் வளர்ச்சியடையாத பகுதிகளில், பட்டினி என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். இந்த சிக்கலை தீர்க்க அது பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது.

 

இந்த ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு என்பதாகும். பசி இல்லாத சூழலை உருவாக்க பங்களிக்கும் தனிநபர்களைப் பாராட்டுவதற்கான அடிப்படையில் இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் கருப்பொருள் கொரோனா தொற்றின் போது கோடி கணக்கான மக்கள் அனுபவித்த துன்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 497