Feed Item
Added a news 

பேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக பதவி வகித்து வருபவர் மைக் ஷெக்ரோப்பர். இவர் வருகிற 2022 ம் ஆண்டில் தன்னுடைய பதவியில் இருந்து விலகி பேஸ்புக்கின் முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பதவிக்கு மாறப்போவதாக முடிவெடுத்துள்ளதாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

 

பேஸ்புக்கை அதிகமாக நேசிக்கும் எனக்கு இது ஒரு கடினமான முடிவுதான். இருந்தாலும், இந்த முடிவு என்னுடைய குடும்பத்துக்கும் என்னுடைய  சேவை முயற்சிகளுக்கும் அதிக நேரத்தை ஒதுக்க எனக்கு உதவியாக இருக்கும் என கூறி உள்ளார். மேலும் அவர் பேஸ்புக் விர்ச்சுவல் ரியாலிட்டி லேப்ஸ்ன் துணைத்தலைவர் ஆண்ட்ரூ போஸ்வொர்த்  அடுத்த தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்பார்.

 

போஸ்வொர்த்  தலைமையிலான திறமையான தொழில்நுட்ப குழுவின் மேல் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். பேஸ்புக்கின் உற்சாகமான எதிர்காலத்திற்கு ஒரு மூத்த உறுப்பினராக ஆதரிக்க முடிந்ததில் பெருமைப்படுகிறேன் என கூறி உள்ளார்.

  • 674