Feed Item
Added a news 

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் கையடக்க அளவில் சிபியூ தயாரித்ததையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவனை நேரில் வர செய்து பாராட்டியுள்ளார்.

பள்ளி பருவ காலத்திலேயே மாணவர்கள் விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனான மாதவன் கையளவு சிறிய சிபியூ கருவியை தயாரித்தது சமீபத்தில் ஊடகங்கள் வாயிலாக பிரபலமானது. மாணவன் மாதவனை நேரில் அழைத்து பாராட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பல சாதனைகள் புரியவும் மாணவனை வாழ்த்தியுள்ளார்.

  • 679