Feed Item
Added a news 

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சூரியன், நிலா, விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட சதுர வடிவ வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியோரம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் பழந்தமிழர்களின் மேம்பட்ட வாழ்வியலுக்கான சான்றுகள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ஏழாம் கட்ட அகழாய்வு, கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது.

கீழடியில் ஏற்கனவே தங்கத்தால் ஆன பல்வேறு பொருள்கள் கிடைத்த நிலையில், தற்போது சதுர வடிவத்தில் வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் இரு புறமும் சூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. இது முத்திரை நாணயமாக இருக்கலாம் என்று அகழாய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் பயன்பாடு, காலம் உள்ளிட்டவற்றை அறிய ஆய்வுக்காக அனுப்ப உள்ளனர்.

  • 573