Feed Item
Added article 

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூருவில் காலமானார்.  கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான யானைப் பாகன் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஜெயந்தி . இந்த படத்தை தொடர்ந்து நீர்குமிழி, பாமாவிஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார. கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக கடந்த 1960-ல் வலம் வந்தார். இவர் இதுவரை சிறந்த நடிக்கைக்கான கன்னட அரசின் ஏழு விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார். 76 வயதாகும் ஜெயந்தி, ஆஸ்துமா பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானார்.

இவரது மறைவுக்கு திரையுலகை சார்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வெள்ளி விழா படத்தில் வரும் காதோடுதான் நான் பாடுவேன் என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

  • 606