Feed Item
Added a news 

எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நாட்டிலே இருக்கின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 16 பேர் விடுவிக்கப்பட்டமைக்கு அரசிற்கும் ஜனாதிபதிக்கும் நன்றிகளை கூறிக் கொள்ளுகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பல வருடங்களாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் மகிழ்ச்சியை தந்துள்ளது.

அதே போன்று ஏனைய அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் குடும்பங்கள் ஏக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தனது பிள்ளை, தனது கணவன் விடுதலை செய்யப்படுவர்களா? என்ற எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆகவே, ஒரு சமிக்ஞை காட்டப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நல்லாட்சி அரசில் கூட அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நல்ல முயற்சிகள் இடம் பெற வில்லை என்பது கவலை தருகின்றது.

அந்த வகையிலே ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். அதே போன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது உரையில் அரசியல் கைதிகள் என்று உச்சரித்தமை அதனை ஏற்றுக் கொண்டு உரையாற்றியுள்ளார்.

  • 419