Feed Item
Added a news 

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாரதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரையான அபராதம் விதிக்கப்படுமென அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை இரண்டாவது தடவை மீறுவோர் 3,000 யூரோக்கள் அபராதம் செலுத்த நேரிடும் என அவர் தெரிவித்தார்.

பிரேஸில், அர்ஜெண்டினா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பயணிகள் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவேண்டும் எனவும், அதன் பின்னரே வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 514