Feed Item
Added a news 

நடிகர் விவேக் நேற்று, எதேச்சையாக பேசிக்கொண்டிருக்கும் மயங்கி விழுந்துள்ளார். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்ட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4 மணி அளவில் விவேக் திடீரென  காலமானார்.

மறைந்த நடிகர் விவேக்கின் நண்பரும் சக நடிகரும் ஆன வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் , அந்த வீடியோவில் கண்ணீருடன் வடிவேலு பேசியிருப்பதாவது:

“என் நண்பன் விவேக் இறந்தது பத்தி பேசும் போது… என்னால முடியல… துக்கம் தொண்டையை அடைக்கிது. அவன் ரொம்ப நல்லவன். சமூக சிந்தனை இருக்கிறவன். கலாம் ஐயா உடன் நல்ல நெருக்கமாக இருப்பான். மரம் நடுவது என எவ்வளவோ விஷயம் பண்ணுவான். ரொம்ப உரிமையாக என்னடா வடிவேலு… என்ன விவேக்கு என நாங்க பேசிக்குவோம். நான் பார்த்ததுல அவனை மாதிரி ஓப்பனாக பேசக் கூடிய ஆளே கிடையாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்களில் அவன் எனக்கு ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவனுக்கு இப்படியொரு மரணம் என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

அவன் இப்போ இறந்துட்டான்…என்னால் முடியல.. இந்த நேரத்தில் என்ன பேசுவதென்று தெரியல. அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த என்னால முடியல. ஏன்னா. நான் மதுரையில் என் அம்மாவோட இருக்கேன். என்னோட நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவன் எங்கேயும் போகல… மக்களோடு மக்களாக நிறைந்திருக்கிறான். அவனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்” இவ்வாறு வடிவேலு அந்த வீடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் வடிவேலுவை பார்த்த ரசிகர்கள் அவர் உடல் இளைத்துள்ளதால் மிகவும் வருத்தப்படுகின்றனர். 

  • 631