Feed Item
Added a news 

பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் அன்புவின் மனைவியாக மிகவும் நெகழ்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியவர் ரித்விகா. பாலாவின் பரதேசி படத்தில் அறிமுகமான ரித்விகா, அடுத்து அழகு குட்டி செல்லம், அஞ்சல, ஒரு நாள் கூத்து, இருமுகன், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி நடித்தார்.

கபாலி படத்தில் திக்குவாய் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு டைட்டில் வென்றார். 

தற்போது கைவசம் எந்த படங்களும் இல்லாத நிலையில் ரித்விகா போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் படங்களை பதிவேற்றி வருகிறார்.

சமீபத்தில் இவர் பதிவேற்றிய புகைப்படத்தில் ஆரஞ்சு நிற பேக்ரவுண்டில் முட்டி வரை ஆடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். 

  • 626