Feed Item
Added a news 

கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுக்க பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கொரோனாவைரஸ் பாதிப்பு பற்றிய சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தடுப்பூசி முகாம்களுக்கு வழிகாட்ட கூகுள் தனது சர்ச் மற்றும் மேப்ஸ் சேவையில் புது அப்டேட் வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவைரஸ் பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தை கடந்துள்ளது.

பாதிப்பை பெருமளவு குறைக்க தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. கடந்த மாதம் கூகுள் நிறுவனம் பல்வேறு தடுப்பூசி பற்றிய தகவல்களை மிக எளிமையாக கொண்டு செல்லும் முயற்சியை துவங்கியது. 

தற்போது கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் சர்ச் தளங்களில் மக்களுக்கு அருகாமையில் கிடைக்கும் தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. முதற்கட்டமாக இதுபற்றிய தகவல்கள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிலி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது. 

  • 674