Feed Item
Added a post  to  , ஐபில் 2021

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில்  நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனான ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 36 ரன்கள், அம்பதி ராயுடு 23 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் (நாட் அவுட்) அடித்தனர். அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்கள் விளாசினார். 

இதையடுத்து 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆடினர். 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 138 ரன்கள் சேர்த்தனர், பிரித்வி ஷா 38 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

  • 691