Feed Item
Added a news 

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் அமைச்சரவைக்கு இது குறித்து அறிவித்தார்.

இதன்படி, சம்பளம் வழங்குதல், கடன் சேவைகள், ஓய்வூதியம், வைத்தியசாலை மருத்துவ சேவைகள், மாதாந்த சமுர்த்தி மானியங்கள், முதியோர்களுக்கான நிதியுதவி, ஊனமுற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிதியுதவி, சிறுநீரக நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி உதவி என்பவற்றுக்கு மாத்திரமே நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

  • 462