Feed Item
Added a news 


கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் இயங்கி வந்த கிளிநொச்சி மாவட்டத்துக்கான பெண் நோயியல் மார்பக சிகிச்சை நிலையத்தினை அண்மையில் கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள தொற்று நோயில் வைத்தியசாலை வளாகத்திற்கு மாற்றிய இருந்தபோது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந. சரவணபவன் கிருஷ்ணபுரம் மலையாள கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்ததோடு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் குறித்த கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் மலையாளபுரம் போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்து சேவைகள் இன்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள குறித்த போக்குவரத்து சேவையின் ஊடாக கிருஷ்ணாபுரம் மலையாளபுரம் பாரதிபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் நன்மை அடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 284
Comments
Info