Feed Item
Added a post 

அகத்தி கீரை சூப் குடிங்க......

குடல்புண் மற்றும் வயிற்றுப்புண் தோன்றுவதற்கான காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. இருந்தாலும் புகைபிடித்தல், புகையிலை சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் சாப்பிடுவதினால் குடல் புண் தோன்றுகிறது.

அகத்திகீரையை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும். அதனுடன் இரண்டு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு, ஒரு கையளவு துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக வேக வைக்கவும். பின்பு அவற்றில் இருக்கும் சூப்பை குடிக்கவும்.

துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்து கடைந்துகொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாக தினமும் செய்து சாப்பிடலாம்.

அகத்திகீரையின் மருத்துவ பயன்கள்

1. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரை மிகசிறந்த மருந்தாகும்.

2. அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும்.

3. ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.

4. அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை நிவாரணம் கிடைக்கும்.

5. அகத்தி கீரையைப் சாறு பிழிந்து அதன் சாற்றை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும்.

6. அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பித்தால் கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.

7. இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ போன்ற சத்துகள் அதிகளவு நிறைந்து உள்ளது. பால் சுரப்பு அதிகம் இல்லாத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும்.

 8. அகத்தி கீரை வயிற்றுப் புண் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும் 1 வேளை குடிக்கலாம்.

9. உடலில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

10. அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

  • 360