Feed Item
Added a news 

கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,805 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,24,164 ஆக குறைந்தது. புதிதாக 26 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,655 ஆக உயர்ந்தது. இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,24,164 ஆக உயர்ந்துள்ளது.

  • 225