Feed Item
Added a video 

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் செல்வி ந.ரஞ்சனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் பிரதேசத்தின் கலைஞர்களினால் மாநாட்டு மண்டபத்திற்கு விமரிசையாக அழைத்து வரப்பட்டனர்.மங்கல விளக்கேற்றளுடன் ஆரம்பமாகிய நிகழ்வின் பின் தமிழன்னைக்குபிரதம விருந்தினராக கந்துகொண்ட மாவட்ட செயலாளரினால் மாலை அணிவிக்கப்பட்டது.பாண்டியன்குளம் பாடசாலை மாணவர்களினால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ம.ஜெபமயூரன் வழங்கினார்.தொடர்ந்து மல்லாவி நர்த்தனாலய நடன மாணவர்களினால் நடனமும் வழங்கப்பட்டிருந்தது.பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் தெய்வீக கானங்கள் வழங்கப்பட்டன.நட்டாங்கண்டல் பாடசாலை மாணவர்களினால் கிராமிய நடனங்களும் வழங்கப்பட்டிருந்தன.நிகழ்வில் கலைஞர்கள் /மாணவர்கள் விருந்தினர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திரு.க.விமலநாதன்(மாவட்ட செயலாளர் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு ,திரு.சிவகுரு திருவாகரன் (செயலாளர்-மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு ,வடமாகாணம்)சிறப்பு விருந்தினர்களாக திரு.சி.குணபாலன் (மேலதிக மாவட்ட செயலாளர்-மாவட்ட செயலகம் முல்லைத்தீவு)திருமதி- சி.ராஜமல்லிகை (பிரதிப்பணிப்பாளர்-பண்பாட்டலுவல்கள் திணைக்களம்- வடமாகாணம்)திரு.பொ. சிவானந்தம் (சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் நிலஅளவை காரியாலயம்- முல்லைத்தீவு)திரு.பொ.சுஜாத்குமார் (கணக்காளர்- பிரதேச செயலகம் கண்டாவளை)கௌரவ விருந்தினர்களாகதிரு.ந.கமலேஸ்வரன்(அதிபர்-சிராட்டி குளம்)திருமதி.ந.கேதீஸ்வரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் ,பிரதேச செயலகம்- துணுக்காய்)திரு.சு.அறிவழகன் (கலைஞர் –கரும்புள்ளியான்)ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்,பொதுமக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள்,பொது அமைப்புகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

  • 351