Feed Item
Added article 

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் சோழர் வரலாறு குறித்து நடிகர் விக்ரம் ஆங்கிலத்தில் நிருபர்களுக்கு பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர் ராஜராஜ சோழன் பெரிய கோவில் கட்டிய விதம், கலை நுணுக்கங்கள் குறித்தும், அதற்காக மேற்கொண்ட பணிகள் குறித்து விவரித்து பேசினார். அதோடு மட்டுமல்லாமல் சோழர்கள் கடல்கடந்து இந்தோனேசியா, இலங்கை, உள்ளிட்ட நாடுகளை ஆண்டது குறித்தும் பேசினார்.

அதில் “9ம் நூற்றாண்டில் இங்கிலாந்து வைக்கிங்குகளிடம் போராடிக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் எந்த பேரரசும் காண முடியாத மிகப்பெரும் பண்பாடு வளர்ச்சி அடைந்திருந்தது. சோழர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணைகளை கட்டியிருந்தனர். அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்பட்டு வந்தது. இவை உலக நாட்டின் மற்ற பேரரசுகளால் சிந்திக்க இயலாதவை” என்று கூறினார்.

விக்ரம் சோழர் வரலாறு குறித்து விவரித்து பேசியதை வியந்து கேட்ட ஜெயம் ரவி, பின்னர் அவரை கட்டியணைத்துக் கொண்டார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து சோழர்களின் பெருமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

  • 220