Feed Item
Added a news 

புதுக்குடியிருப்பில் நீண்டநாட்களாக இடம்பெற்ற மிதிவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் 6 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 மிதிவண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதா நெருக்கடி காரணமாக மிதிவண்டிக்கான விலையும் அதிகரித்துள்ளது எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் அதிகளவில் மிதிவண்டி பாவனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்இன்னிலையில் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் விவசாயிகள் வரையில் மிதிவண்டியினை வாங்கிவருகின்றார்கள் இதனால் அதிகளவுகேள்விகள் காணப்படுவதால் மிதிவண்டிகளை திருடி மாற்றம் செய்து விற்பனை செய்யும் திருடர்களின் செயற்படுகளும் அதிகளவில் பதிவாகிவருகின்றது.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பல பகுதிகளில் மிதிவண்டி திருட்டில் ஈடுபட்டு அவற்றை விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் தொடர்பில் திருட்டில் ஈடுபட்ட வேளை சி.சி.ரி.வி கமராவில் பதிவான காட்சிகளைவைத்து திருடனை அடையாளம் கண்ட பொலீசார் 29.06.22 அன்று கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி ஆர்.கேரத் தலைமையிலான (PS-60910)ஜெயசிங்க, (PC-70537)குணவர்தன,(PC-88509) பிரதீபன்,(PC-96676) டினேஸ்ராஜ்,(PS-62025)தயானந்த,(PS-93561)அஸ்வர் கொண்ட குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் கைவேலி,வேணாவில் பகுதி சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களின் ஒத்துளைப்புடன் திருடர்களை கைதுசெய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.மிதிவண்டி திருட்டில் ஈடுபட்ட ஒருவரை கைவேலி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புடைய கைவேலி பகுதியினை சேர்ந்த மூவரை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து 13 மிதிவண்டிகள் மீட்கப்பபட்டுள்ளனமற்றும் ஒரு இடத்தில் மிதிவண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கு பகுதியினை சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் மற்றும் ஒரு மிதிவண்டி திருட்டு சம்பவத்தின் உடையார் கட்டு குரவில் பகுதியில் வசிக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் இருந்து 15 மிதிவண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.இவர்களை நாளை 01.07.2022 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  புதுக்குடியிருப்பு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

  • 275