Feed Item
Added a news 

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைய இருந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த சில மாதங்களாகவே இந்த போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர். உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா – உக்ரைன் இடையே தீவிரமான போர் நடந்து வருகிறது. இந்நிலையில் போரால் இருதரப்பு ராணுவ வீரர்களுமே தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

சமீபத்தில் உக்ரைனை சேர்ந்த நிராயுதபாணியான மூதாட்டி ஒருவரையும், வடகிழக்கு சுமி கிராமத்தை சேர்ந்த ஒருவரையும் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக ரஷ்ய வீரர் ஒருவரை உக்ரைன் கைது செய்தது. அவர் மீது உக்ரைன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த ரஷ்ய வீரர் வாடிம் ஷிஷிமரின், மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே கொலை செய்ததாகவும், எந்த தண்டனையையும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அவரது வழக்கை விசாரித்த உக்ரைன் நீதிமன்றம் அவருக்கு போர் குற்றங்களுக்கான முதல் குற்றவாளியாக அறிவித்து வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

  • 714