Feed Item
Added a news 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஊர்காவற்துறை கிளை ( தீவகம் ) ஏற்பாட்டில்  நெடுந்தீவில் குமுதினி படகு படுகொலை 37 வது ஆண்டு நினைவேந்தல்   இகழும் பெரும் அச்சுறுத்தல் கெடுபிடிகளுக்கு மத்தியில் (15-05-2022) நடைபெற்றுள்ளதுகடந்த 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி; காலை மருத்துவ தேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குமாக நெடுந்தீவு மாவிலித் துறையிலிருந்து குழந்தைகள் முதியவர்கள் என 64 இற்கும்மேற்பட்ட பயணிகளுடன் குறிகாட்டுவான் நோக்கி பயணித்த குமுதினி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு கூரிய ஆயுதங்களால் குத்தியும் வெட்டியும் குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர்இப் படுகொலையின் 37 வது ஆண்டு நினைவு நிகழ்வு சிறிலங்கா பாதுகாப்பு படையினரின் இடையூறுகள் , கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று நடைபெற்றது .நிகழ்வின் முன்னதாக மாவிலி துறையில் அமைந்துள்ள புனித சவேரியார் தேவாலயத்திலும் பிடாரி அம்மன் ஆலயத்திலும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வணக்க நிகழ்வு இடம்பெற்றது இதில் பங்குத்தந்தை மற்றும் இந்து மத குரு ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் அமைவனத்தினரால் ( சூழகம் ) நெடுந்தீவு மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும் நிகழ்வும் , மரநடுகையும் நடைபெற்றது.

  • 345