Feed Item

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,38,690 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 456 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 31,50,763 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,18,009 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

  • 192