Popular Posts RSS
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 22.7.2025.இன்று காலை 06.45 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.இன்று இரவு 07.52 வரை வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.இன்று மாலை 04.07 வரை துருவம். பின்னர் வியாகாதம்.இன்று காலை 06.45 வரை தைத்தூலம். பின்னர் மாலை 05.21வரை கரசை. பிறகு வணிசை.இன்று காலை 06.00 வரை அமிர்த யோகம். பின்னர் இரவு 07.52 வரை சித்தயோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வர்த்தகப் பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்து தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே இருக்கும் அதிகரிக்கும். சோர்வு மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பகை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மிதுனம்உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். நினைத்த சில பணிகளை அலைச்சல்கள் ஏற்படும். சில நினைவுகளால் ஒரு விதமான இறுக்கங்கள் உண்டாகும். வியாபாரம் முதலீடுகளில் கவனம் வேண்டும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். மறைமுகமான சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் கடகம்பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்கள் மேம்படும். அலுவல் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். பெருமை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் சிம்மம்முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலையாட்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் படிப்படியாக குறையும். பணி புரியும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம் கன்னிவெளியூர் வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். உலகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு செயல்களில் இருந்த இழுபறிகள் குறையும். உயர்மட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உழைப்புகள் உண்டான மதிப்புகள் கிடைக்கும். மாமி... Read more
மருமகனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,“என்னங்க, அம்மாவை காணோம்” என்றாள் பதற்றமாக மனைவிகணவன் எழுந்தான். ஒரு பெக் விஸ்கியை போட்டுக் கொண்டு துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது உங்கம்மாகிட்ட இருந்து தப்பிச்சிடும்” என்றான்.
இந்த தாவரங்கள் அனைத்தும் பெரிய அளவு மற்றும் அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறனுக்காக அறியப்படுகின்றன. அவை அனைத்தையும் பராமரிப்பது ஒப்பீட்டளவில் எளிதானது, அவை வீட்டுத் தோட்டங்களுக்கான சிறந்த தேர்வாக அமைகின்றன. 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதாகக் கூறப்படும் 5 தாவரங்கள் இங்கே உள்ளன.1. பாம்பு செடிகள் பாம்பு தாவரங்கள் பிரபலமான உட்புற தாவரங்கள் ஆகும், அவை காற்றை சுத்திகரிக்கும் மற்றும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் திறனுக்காக அறியப்படுகின்றன.2. கற்றாழை கற்றாழை ஒரு சதைப்பற்றுள்ள தாவரமாகும், இது இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுகிறது மற்றும் உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.3. வேப்ப மரம் வேப்ப மரங்கள் அவற்றின் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றவை மற்றும் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக நம்பப்படுகிறது. 4. பீப்பல் மரம் புனித அரச மரங்கள் என்றும் அழைக்கப்படும் பீப்பல் மரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதாக நம்பப்படுகிறது மற்றும் சில கலாச்சாரங்களில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.5. Pothos Pothos ஒரு பிரபலமான வீட்டு தாவரமாகும், இது இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் திறனுக்காக அறியப்படுகிறது.... Read more
பூண்டு:5 அல்லது 8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.ஆப்பிள்:பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம்.கொள்ளு:ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும். கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.கறிவேப்பிலை: கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.மிளகு:வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.சீரகம்:ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.இஞ்சி:ஏலக்காய்: இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.சோற்றுக் கற்றாழை:சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து நன்கு கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்.... Read more
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 5 ஆம் தேதி திங்கட்கிழமை 21.7.2025.இன்று காலை 08.56 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.இன்று இரவு 09.08 வரை வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.இன்று காலை 06.55 வரை விருத்தி. பின்னர் துருவம்.இன்று காலை 08.56 வரை பாலவம். பின்னர் இரவு 07.51 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.இன்று முழுவதும் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.15 முதல் 07.15 மணி வரை காலை : 09.15 முதல் 10.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்கணவன், மனைவிக்கு இடையே இருந்த வேறுபாடுகள் மறையும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். சில அனுபவங்கள் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். திடம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை ரிஷபம்குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வர்த்தக பணிகளில் விவேகம் வேண்டும். பழைய சிந்தனைகள் மூலம் செயல்களில் ஒருவித தடுமாற்றம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு மிதுனம்வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். வியாபார பாக்கியங்களை பொறுமையுடன் வசூலிக்கவும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருந்த சில சிக்கல்கள் நீங்கும். ஆர்வம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கடகம்தொண்டு நிறுவன பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகள் மூலம் நினைத்த செயல்களை முடிப்பீர்கள். கலை சார்ந்த பணிகளால் ஆதாயம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்கள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சிந்தனைகளின் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை சிம்மம்சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். முத்திரை தொடர்பான துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோக பணிகளில் உயர்வு ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழிலில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு கன்னிமறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மேன்மை உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அன... Read more
நேத்து நைட்டு வீட்டுல திடீர்ன்னு கரண்ட் ஆஃப் ஆகிடுச்சு...நான் மெழுகுவர்த்தி பொருத்தி எரிய வச்சேன். ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு கரண்ட் வந்துருச்சு.சரின்னு மெழுகுவர்த்திய வாயால் ஊதி அணைக்க try பண்ணேன். மெழுகுவர்த்தி அணைக்க முடியல... ரொம்ப வேகமா ஊதி try பண்ணேன். அப்படியிருந்தும் மெழுகுவர்த்தி அணையல.. எனக்கு மூச்சு முட்ட தொடங்கிடுச்சு.எனக்கு இப்போது லேசாக பயம் வர தொடங்கிருச்சு. ஒரு வேளை ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சு போயிருக்குமோ... நினைக்க நினைக்க தலை சுத்தியது... பதட்டம் கூடிருச்சு..உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பிச்சது.. அய்யோ கடவுளே காப்பாத்துன்னு எல்லா கடவுளையும் கும்பிட தொடங்கினேன்..இதெல்லாம் அமைதியாக சோபால உட்கார்ந்து கவனிச்சுகிட்டு இருந்த என் பொண்டாட்டி சிரிச்சுகிட்டே சத்தமா சொன்னா...யோவ்.. லூசு... முதல்ல வாய்ல இருந்து mask கழட்டிட்டு ஊதித்தொல...... Read more
ஓஷோ சொன்ன கதை...ஒரு ஏழை மரவெட்டி காட்டில் உள்ள சின்னஞ்சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். அந்தக் குடிசை மிகமிகச் சிறியது. அவனும் அவன் மனைவியும் மட்டுமே அதில் தூங்க முடியும் அளவே வசதி கொண்டது. ஒரு மழை நாள் நள்ளிரவில் விறகு வெட்டியின் குடிசைக் கதவு ‘தடதட’வென்று தட்டப்பட்டது.விறகு வெட்டி தன் மனைவியிடம், “யாரோ ஒருவன் வழிதவறி காட்டில் மாட்டிக்கொண்டு விட்டான். மழையில் எங்கும் போகவும் முடியாது. விலங்குகள் ஆபத்து வேறு இருக்கிறது. அதனால் கதவைத் திற” என்றான். அவன் மனைவியோ இந்தக் குடிசையில் இன்னொரு மனிதனுக்கு எப்படி இடம் கொடுக்கமுடியும் என்று கேட்டாள்.விறகு வெட்டி சிரித்தான். “இது ராஜ அரண்மனை அல்ல. அங்கேதான் இடப் பற்றாக்குறை இருக்கும். இது ஒரு ஏழையின் குடிசை. இங்கே இரண்டு பேர் வசதியாகத் தூங்க முடியும். மூன்று பேர் வசதியாக அமர்ந்து இருக்க முடியும். கதவைத் திற” என்றான்.கதவு திறக்கப்பட்டது. வந்த மனிதன் விறகு வெட்டிக்கும் அவன் மனைவிக்கும் நன்றி சொல்லி அமர்ந்தான். அவர்கள் சேர்ந்து அமர்ந்து கதைகளைச் சொல்லிப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தபோது கதவைத் தட்டும் சத்தம் மீண்டும் கேட்டது. கதவடியில் உட்கார்ந்திருந்த விருந்தினன், இன்னொருவருக்கு இடமில்லையே என்றான்.விறகு வெட்டியோ, “இதைத்தான் நீங்கள் முன்பு வரும்போதும் என் மனைவி கூறினாள். அவளது சொல்லைக் கேட்டிருந்தால் நீங்கள் குடிசைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. மூன்று பேர் சௌகரியமாக அமர்வதற்கு இடம் இருந்தால் நான்காம் நபருக்கும் கொஞ்சம் இடம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்லி கதவைத் திறக்கச் சொன்னான்.தற்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். ஒரு அங்குலம் அளவு கூட இடமில்லை. மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஆனால் அது ஒரு மனிதனுடையதைப் போல இல்லை. இப்போதும் விறகுவெட்டி கதவைத் திறப்பானோ என்று இரண்டு விருந்தினர்களுக்கும் அச்சம்.விறகுவெட்டியோ, “கதவைத் திறங்கள். அது என்னுடைய கழுதைதான். இவ்வளவு பெரிய உலகில் அது ஒன்றுதான் எனது நண்பன். நான் தினசரி வெட்டிக்கொண்டு வரும் விறகுகளைச் சுமக்கும் உயிர் அது. வெளியே கடும் மழை பெய்கிறது. என் நண்பனை வரவேற்போம்” என்றான்.விறகு வெட்டியின் மனைவி உட்பட எல்லாரும் கதவைத் திறப்பதை எதிர்த்தனர். “கழுதை உள்ளே வந்தால் அது எங்கே நிற்கும். உனது குடிசையில் இப்படி மாட்டிக்கொண்டிருப்பதை விட மழைய... Read more
"என்னங்க.. உங்க கார்டை குடுங்க. கொஞ்ச நாள் நான் வச்சுக்குறேன்..""ஏன் திடீர்னு கார்டு கேட்கிற?""ஏதாவது emergencyனா.. அதான்..""2 நாள் கழிச்சு தறேன்..""இல்ல எனக்கு இப்பவே வேணும்.. முக்கியமான பொருள் வாங்கணும் அர்ஜெண்ட்டா..""உனக்கு என்ன அர்ஜெண்ட்னு எனக்கே தெரியும். நாளைக்கு என் பிறந்தநாளுக்கு கிஃப்ட்னு சொல்லி என் கார்டுலேயே ஏதாவது ஆர்டர் போடுவ. அதனால நான் 2 நாள் போகட்டும் தர்றேன்..""ஏன்ங்க உங்க சர்ப்ரைஸ நீங்களே கெடுக்குறீங்க?""அதுக்கு தான் உன் கைல காசே குடுக்காம வச்சுருக்கேன்.. ""உங்களுக்கு ஏதாவது நான் குடுக்கணும்னு ஆசை படுறேன்.. பேசாம வர்றீங்களா buffet கூட்டிட்டு போறேன்..""கூட்டிட்டு போய்.. அங்க இதே கார்டை தான் தேய்க்க போற..""பார்த்தீங்களா.. இதுக்கு தான் நான் அப்பவே வேலைக்கு போறேன்னு சொன்னேன். நீங்க தான் நீ வீட்ல இரு. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன்னு சொன்னிங்க. இதுவே நானே சம்பாரிச்சு..."He:"நீ பேசாம அமைதியா நான் சொல்லுறதுக்கெல்லாம் அந்த ஒரு நாளாச்சு தலையாட்டிட்டு இருக்குறது தான் நீ எனக்கு தரப்போற பிறந்த நாள் பரிசு. காசும் செலவாகாது.. நானும் நிம்மதியா இருப்பேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. "... Read more