Poems of sivam RSS
எங்கிருந்தோ மீண்டு(ம்) வந்ததுஏக்கமாய் மரத்தில் அமர்ந்ததுகூடுதனின் வெறுமை ஊடுருவி...கூண்டின் தனிமையாய் சிட்டுக்குருவி...!
நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன்நீ நெருப்புப் புகையோடுப்போராடிக் கொண்டிருக்கிறாய்.நான் பல் துலக்குகிறேன்நீ பாத்திரங்களைப்புதுப்பிக்கிறாய்.நான் செய்தித்தாளில்செய்திகளைச் சேகரிக்கிறேன்.நீ வீட்டில் குப்பைகளைப்பெருக்குகிறாய்.நான் உடலைச் சுத்தம் செய்கிறேன்.நீ ஆடைகளின் அழுக்குகளைப்பிரித்துக் கொண்டிருக்கிறாய்.நான் பசியாற வயிற்றை நிரப்புகிறேன்.நீ பாத்திரங்களைநீரால் நிரப்புகிறாய்.நான் அலுவலகம் கிளம்புகிறேன்.நீ பிள்ளைகளைச்சீருடையில் அனுப்பி விட்டுஎன்முறைக்காகக் காத்திருக்கிறாய்.நான் இரவு வீடு திரும்புகிறேன்.நீ இன்னும் திரும்பவில்லைசமையலறையிலிருந்து.நான் தூங்கச்செல்கிறேன்.நீ கதவின் தாழ்ப்பாள்களையும்எரியும் மின்விளக்குகளையும்பிள்ளைகளின் போர்வைகளையும்சரிபார்த்து விட்டேபடுக்கையில் விழுகிறாய்.ஒவ்வொரு ஞாயிறுகளும்ஒவ்வொரு பண்டிகைகளும்எங்களுக்கு ஓய்வு நாட்கள்உனக்கு?உறவு வீட்டு விழாக்களில்எங்களிடத்தில் நீ!கல்விக்கூடங்களின்கேள்விகளுக்கானப் பதில் நீ!சோக நிகழ்வுகளிலும்கண்ணீர் சிந்திய படி நீ!எங்களின் பிரதிநிதியாககோவில்களிலும் நீ!என் வாழ்க்கைத்தோழியே!இப்போதெல்லாம்" நான் வேலைச்செய்கிறேன்''என்று சொல்லவேதயக்கமாக இருக்கிறதுகழிந்தப் பொழுதின்உன் ஒற்றைப் பதிலால்..புள்ளிவிபரம் சேகரிக்க வந்தஅரசு ஊழியர் உன்னிடம் கேட்டார்." வேலைப் பார்க்கிறீர்களாமா?"உன் பதில்.." இல்லங்க..நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்... Read more
படகுவிடும் குடும்பம்உங்களுடையதுநீங்களோஏவுகணை விடுத்தீர்கள்வடலூர் வள்ளலாரும்நீங்களும் ஏற்றியஅக்கினி மட்டும்அணைவதே இல்லைஎங்களுக்கு வாய்த்தஇஸ்லாமிய காந்தி நீங்கள்ஜனாதிபதி மாளிகையில்கைப்பெட்டியோடு நுழைந்துகைப்பெட்டியோடு வெளிவந்தகர்ம வீரரே!மீண்டு வரும்போதுஅந்தப் பெட்டிக்குள்ஒன்றும் இல்லை என்பதில்உண்மை இல்லை130 கோடிஇந்திய இதயங்களைஅந்தச் சின்னப் பெட்டிக்குள்சிறைகொண்டு வந்தீரேஅப்துல் கலாம் அய்யாஅழியாது உமது புகழ்;அது இந்திய வானத்தில்எழுதப் பட்டிருக்கிறது... Read more
சின்ன சீடையுடன்சிரிக்கும் கைமுறுக்கும்...சீப்பு சீடையுடன்சீரான தேன்குழலும்...செட்டிநாட்டின் புகழ் சொல்லும்சிறப்பாய் இவற்றுடன்.....தட்டடையுடன் தித்திக்கும் அதிரசமும்தட்டுதனில் நிரம்பும் பலகாரம்...தீபத் திருநாளாம்தீபாவளி கொண்டாட்டம்தொடங்கியதை கூறும் ஆதாரம்!
வெள்ளிநிலவை விளையாட்டு காட்டிவெகுநேர்த்தியாய் அமுதினை ஊட்டிகுழந்தை பசியாற்றுகிறாள் அன்னை...குழந்தை அழகில் பசியாறுகிறது நிலா...!
குழந்தை நனையாமல்குடை பிடித்தாள் அன்னை...தடுக்கமுடியவில்லை அதனால்தாயவள் பாசமழை...!