Feed Item
·
Added a news

ஒண்டாரியோ மாகாணத்தின் பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் உள்ள டோரன்ஸ் பகுதியில் மர்மமான சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹார்டி லேக் சாலையில் சடலம் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, ஒன்டாரியோ மாகாண பொலிஸார் பிரேஸ்பிரிட்ஜ் பிரிவு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைக்குள் ஹார்டி லேக் சாலை பகுதியில் இருந்தவர்கள் யாரேனும் டாஷ்கேம் (Dashcam) காட்சிகள் அல்லது தொடர்புடைய தகவல்களை வைத்திருந்தால் பகிருமாறு பொலிஸார் கோரியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

  • 90