வரும் காலத்தில் பூமியில் போர் நடப்பதைவிட வானத்தில் தான் போரே நடக்க போகிறது. ஒவ்வொரு நாடுகளும் ஏவுகணைகளுக்கும், டிரோன்களுக்கும் கோடிகளை கொட்டுகின்றன. எதிரிகளின் நாட்டுக்கே செல்லாமல், எதிரிகளின் இலக்குகளை தாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. அந்த வகையில் ரஷ்யா தயாரித்து சோதனை செய்த புரவேஸ்ட்னிக்கை உலகின் உலகத்தில் எந்த நாட்டாலும் ஒன்றுமே செய்ய முடியாது. அணு ஆயுதமான அது எப்படி செயல்படும்.
ரஷ்யாவை பொறுத்தவரை அமெரிக்காவை போல் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. உலக நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷ்யாவை தவிர உலகின் எந்த நாட்டுடனும் அமெரிக்கா எளிதாக மோதும். அதேநேரம் ரஷ்யா உடன் மட்டும் நேரடியாக மோதுவது இல்லை.
உலகம் முழுக்க அண்மை காலம் வரை பாலிஸ்டிக் ஏவுகணைகள் தான் இருந்து வந்தன. தற்போது அதற்கு பதிலாக குரூஸ் ஏவுகணைகளை எல்லா நாடுகளும் பயன்படுத்த தொடங்கிவிட்டன. பாலிஸ்டிக் ஏவுகணை என்பது பூமியில் இருந்து விண்ணில் நேராக சென்று பின்னர் வளைந்து சென்று இலக்கை நோக்கி விழும் ஏவுகணையாகும். ஆனால் குரூஸ் ஏவுகணைகள், விமானம் போல் பறந்து சென்று இலக்கினை தாக்கும் இயல்பு உடையது.
இந்த குரூஸ் ஏவுகணைகள் எல்லாவற்றிற்கும் எவ்வளவு தூரம் சென்று தாக்கும் என்ற ஒரு தூர இலக்குடன் செயல்படும். அமெரிக்காவின் டோமாஹாக், சீனாவின் சிஜே-10 ஆகியவை 2,500 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று இலக்கை தாக்கும். இந்தியாவின் நிர்பாய் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும். ஆனால் ரஷியாவின் புரவேஸ்ட்னிக், தூரம் என்பதே கிடையாது. அது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சென்று இலக்கை தாக்கும் இயல்புடையது என்கிறார்கள்.
ஏவுகணைகளின் என்ஜின் திறனை வைத்து தூரம் முடிவு செய்யப்படும் நிலையில், புரவெஸ்ட்னிக், என்ஜின்களுக்கு பதிலாக சிறிய அணு உலையை பயன்படுத்துகிறதாம். அதனால் எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும் என்கிறார்கள். உலகின் எந்த பகுதியையும், இனி ரஷியாவால் தனது நாட்டில் இருந்தே குறிவைத்து அழிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த புரவேஸ்ட்னிக் அணுக்களால் செயல்படுகிறது. இது கொண்டு செல்லும் ஆயுதமும் என்பது வெறும் குண்டுகள் அல்ல.. அணு ஆயுத குண்டுகள் ஆகும். இதனால் எனவே புரவெஸ்ட்னிக் மிக மோசமான அழிவை ஏற்படுத்தும் வல்லமை உடையதாகும்
