தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்திற்கு ஒரு இயந்திரம் வடிவு அமைத்துக் கொடுத்தார்.. அதற்கு என்ன விலை நிர்ணயம் செய்யலாம்? என்பது சற்றுக் குழப்பமாக இருந்தது.. எடிசனும்,அவரது மனைவியும் இது பற்றி விவாதித்தார்கள்.
எடிசன் மனைவி இருபதாயிரம் டாலர் கேளுங்கள் என்றார். எடிசனோ, "இந்தத் தொகை பெரிய தொகையாக இருந்தால் யாரும் வாங்காமல் போனால் என்ன செய்வது? என்று சிந்தித்துக் கொண்டு இருந்தார். பணம் தருவதற்காக நிறுவனத்தின் ஒரு மூத்த அதிகாரியை வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் அனுப்பி இருந்தது. இயந்த்திரத்துக்கான விலையை அதிகாரி கேட்டார். எடிசன் சில நிமிடம் மௌனமாக இருந்தார். எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தார்..
பொறுமை இழந்த அந்த நிறுவனத்தின் அதிகாரி''எடிசன் சார். "இதோ உங்கள் இய்ந்திரத்திற்க்கான விலை முதல் தவணையாக நூறு ஆயிரம் டாலர்கள்" என்று சொல்லி அதற்கான காசோலையைக் கொடுத்தார். மீதி எவ்வளவு என்று சொல்லி அனுப்புங்கள், காசோலையை அனுப்பி வைக்கின்றோம் என்று கூறி இயந்திரத்தை எடுத்துச் சென்றார். அவசரப்படாமல், பொறுமை காத்த எடிசனுக்கு நான்கு மடங்கு இலாபம் கிடைத்தது. அவசரப்பட்ட நிறுவனத்தின் அதிகாரியால் நான்கு மடங்கு நட்டம் நிறுவனத்திற்கு ஏற்பட்டது.
அவசரம் நமக்கு சிப்பிகளைத் தரலாம், ஆனால் பொறுமையே முத்துகளைத் தர முடியும். ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது அவரின் பொறுமையே ! பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு ! அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன் தரும்.