Feed Item
·
Added a post

காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர்.அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனை வைத்தான்.

தன கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும், சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.

ஆசிரியர் சொன்னார்,''பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்'' என்று கூறினார்.

எப்படி சரி பார்ப்பது?'நீங்கள் சொன்ன விடை சரிதான்,'என்று கூறி விடுதலை செய்தான்..

  • 14