Feed Item
·
Added article

‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் இதில் மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் பரவின. முன்னதாக சில முறை இப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

’டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று பரவிய வதந்திகளுக்கு படக்குழு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ‘டாக்சிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவங்க படக்குழு முடிவு செய்திருக்கிறது. இன்னும் 140 நாட்களில் வெளியீடு என்று ‘டாக்சிக்’ தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் தெரிவித்துள்ளது.

கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

  • 484